”HINDUS 4 குழந்தை பெத்துக்கணும்! MUSLIMS-அ விடக் கூடாது” பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொண்டு இந்தியாவை பாகிஸ்தானாக மாற்றப் பார்க்கிறார்கள், இந்துக்களும் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என பாஜக தலைவர் பேசியிருப்பது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பாஜகவினர் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், மக்கள் மத்தியில் மதவெறியை தூண்டுவதாகவும் தொடர்ந்து விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் பாஜக முன்னாள் எம்.பி நவ்நீத் ராணா இஸ்லாமியர்கள் குறித்து தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தனக்கு 4 மனைவிகள், 19 குழந்தைகள் இருப்பதாக இஸ்லாமியர் ஒருவர் கூறினார்
இஸ்லாமியர்கள் 19 குழந்தைகள் பெற்றுக் கொண்டால்..
இந்துக்கள் 3 அல்லது 4 குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்
அவர்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றுக் கொண்டு இந்தியாவை பாகிஸ்தானாக மாற்ற நினைக்கிறார்கள்
நாம் மட்டும் ஏன் ஒரு குழந்தையோடு மட்டும் நிறுத்திக் கொள்ள வேண்டும்
நாமும் 3, 4 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்
இதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பேசிய எம்.பி மாணிக்கம் தாகூர், ”நாம் அறிவியல் பூர்வமாக சிந்திக்க வேண்டும். மூடநம்பிக்கையை பின்பற்றி செயல்படக் கூடாது. இந்தியாவின் மக்கள் தொகை உயர்வு ஆபத்தானது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியாத மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. RSS மற்றும் பாஜகவின் முட்டாள்தனமான யோசனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்தும் குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ளுங்கள் என தொடர்ந்து சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.





















