மேலும் அறிய
Vicky Nayan Pet : நயன் விக்கி குடும்பத்தில் மற்றொரு ஜீவன் இணைந்தாச்சு..உங்களுக்கு அது யாருனு தெரியுமா?
Vicky Nayan Pet : நயன்தாராவின் சமீபத்திய பதிவு இணையவாசிகளை ஈர்த்துள்ளது.
செல்லப்பிராணியுடன் விக்னேஷ் சிவன்
1/6

இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாராவை காதலிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து, ‘தங்கமே’, ‘செல்லமே’என வரிசையாக போஸ்ட் மாரி பொழிந்து வந்தார்.
2/6

இன்ஸ்டா கணக்கு விக்கியின் கணக்காக இருந்தாலும், பார்க்கும் இடமெல்லாம் நயனின் போட்டோவும் ரீல்ஸும்தான் இருக்கும்.
3/6

உலகெங்கும் சுற்றி வந்து, புகைப்படம் எடுத்து வந்த இவர்கள், தங்கள் குழந்தைகளான உயிர் மற்றும் உலகுடன் மாற்றி மாற்றி போட்டோஷூட் செய்து வருகின்றனர்.
4/6

அத்துடன் விக்கி, சமீபகாலத்தில் பதிவிடும் புகைப்படங்களுடன், அவர் எழுதிய ரத்தமாரே பாடலையும் இணைத்து வந்தார். முதலில், இதை பார்த்து ஹார்டின் விட்ட ரசிகர்கள் எல்லாம், விக்கி மீண்டும் மீண்டும் அந்த பாடலை பயன்படுத்த, சற்று கடுப்பாகி விட்டனர். ‘ஒரு அளவுக்குதான் பொறுமை’என்றெல்லாம் கமெண்ட் செய்து வந்தனர். இதற்கு பின்னர், விக்னேஷ் சிவனும் ரத்தமாரே பாடலை இன்ஸ்டாவில் ரத்து செய்துவிட்டார்.
5/6

வழக்கமாக, குழந்தைகளுடனும், பெற்றோர்களுடனும், நண்பர்களுடனும் போட்டோ பதிவிட்டு வந்த நயன், முதல் முறையாக செல்ல பிராணியின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். விக்கி விளையாடி கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது.
6/6

விக்கி-நயனின் குடும்பத்தில் ஒன்றான இந்த செல்ல பிராணி, “டிபெட்டன் மஸ்டிப்”(Tibetan mastiff) எனும் இணைத்தை சார்ந்தது. சிங்கம் போன்ற பிடரியை கொண்ட இது, தோற்றத்தில் சிங்கம் போலவே இருக்கும். ரூ .50,000 முதல் ரூ.2,00,000 வரை விற்கப்படும் இந்த பிராணியின் விலை சில சமயம் ரூ.25,00,000 வரை விற்பனைக்கு போகுமாம்.
Published at : 03 Oct 2023 11:23 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















