மேலும் அறிய
Raththam Short Review : மீண்டும் ஒரு க்ரைம் கதை.. ரத்தம் படத்தின் குட்டி விமர்சனம் இதோ!
Raththam Short Review : நந்திதா ஸ்வேதா, நிழல்கள் ரவி , ரம்யா நம்பீசன் உல்ளிட்டவர்கள் நன்றாக நடித்திருந்தாலும் வெளிச்சம் படும் அளவிற்கு சிறப்பான கதாபாத்திரங்கள் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.

ரத்தம் பட போஸ்டர்
1/6

சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் ரத்தம் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, நந்திதா ஸ்வேதா, மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
2/6

பிரபல பத்திரிகையாளர் செழியனின் கொலை சம்பவத்தில் ஏற்படும் புதிரில் இருந்து தொடங்கும் கதை மெல்ல கதாநாயகன் ரஞ்சித் குமாரை (விஜய் ஆண்டனி) நோக்கி நகர்கிறது.
3/6

ஒரு காலத்தில் உலக அளவில் புகழ்பெற்ற புலனாய்வு பத்திரிகையாளராக இருந்த ரஞ்சித் தற்போது தனது மகளுடன் கொல்கத்தாவில் வசித்து வருகிறார். தனது மனைவி இறந்துவிட்ட குற்றவுணர்ச்சியால் தீவிர மதுபோதைக்கு அடிமையாகிறார்.
4/6

சந்தர்ப்ப சூழ்நிலையால் மீண்டும் தனது வேலைக்குத் திரும்பும் ரஞ்சித் மர்மமான முறையில் நடக்கும் இந்த கொலைகளை செய்பவர்களை தேடிக் கண்டுபிடிப்பதே படத்தின் கதை.
5/6

நல்ல ஒரு கதையை கொண்டிருந்தாலும் அதை சராசரிக்கும் குறைவான சுவாரஸ்யத்தில் எடுத்திருக்கிறார் சி.எஸ் அமுதன். இந்த கொலைகளை எல்லாம் செய்பவர்களின் நோக்கம் என்ன என்பதை சொல்லாமலே சாமர்த்தியமாக கடந்துசென்று விடுகிறார். ஒன்றன் பின் ஒன்றாக சுவாரஸ்யம் இல்லாத காட்சிகள் வந்தபடி இருக்கின்றன.
6/6

ஆக மொத்தத்தில் வன்முறை தெரிப்பதை குறிக்கும் வகையில் “ரத்தம்” என டைட்டில் வைத்தாலும் உள்ளே அதற்கான எந்த தடயமும் பெரிய அளவில் இல்லை என்பதே உண்மை..!
Published at : 06 Oct 2023 04:04 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion