NITHYANANDA: நான் செத்துட்டேனா? ஓடிவந்த நித்தியானந்தா - கைலாசாவில் இருந்து என்னெல்லாம் சொல்லி இருக்காரு?
NITHYANANDA: நித்தியானந்தா இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலுக்கு அவரே மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

NITHYANANDA: நித்தியானந்தா இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலுக்கு அவரே மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
நித்தியானந்தா இறந்துவிட்டாரா?
சர்ச்சைகளுக்கு பெயர் போன நித்தியானந்தா, இந்து தர்மத்தைக் காக்க உயிர்த் தியாகம் செய்ததாக, அவரின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் வீடியோ வெளியிட்டது பரபரப்பைக் கிளப்பியது. அதோடு, அவருக்கு பிடதி, அகமதாபாத் என இந்தியா முழுவதும் 41 இடங்களில் நித்தியானந்தாவுக்கு ஆசிரமங்கள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் என்றும், அவற்றின் அடுத்த வாரிசு யார் என்று விவாதங்கள் எழுந்தன. அதேநேரம், பல்வேறு வழக்குகளில் சிக்கி தலைமறைவாகி உள்ள நித்தியானந்தா, போலி அடையாளம் மூலம் மீண்டும் இந்தியாவிற்குள் நுழையவே அவர் இறந்துவிட்டதாக வதந்திகள் பரப்புவதாகவும் கூறப்பட்டது.
”நான் செத்துட்டேனா?”
இந்நிலையில் தான் நித்தியானந்தா உருவாக்கியதாக சொல்லப்படும் கைலாசா நாட்டின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் இருந்து ஒரு விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. அதில், “ இந்து மதத்தின் உச்சப் போதகர் நித்தியானந்தா (SPH) உயிர் தியாகம் செய்துவிட்டார் என்று பல இந்துத்துவ ஊடகங்கள் வேண்டுமென்றே, தீங்கிழைக்கும் விதமாகவும், குற்றவியல் ரீதியாகவும் கூறி வருகின்றன. அவர் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், உயிரோடு மற்றும் சுறுசுறுப்பாக இருக்கிறார் என்பதை கைலாசா அறிவிக்கிறது. மார்ச் 30, 2025 அன்று, நித்தியானந்தா உகாதி கொண்டாட்டங்களை அலங்கரித்து, அனைத்து பக்தர்கள், சீடர்கள் மற்றும் 2 பில்லியன் இந்து புலம்பெயர்ந்தோரை ஆசீர்வதித்த உரை இங்கே வழங்கப்பட்டுள்ளது.
கண்டனம் தெரிவித்த கைலாசா:
அவரை இழிவுபடுத்தவும் அவதூறு செய்யவும் பரப்பப்படும் இந்த தீங்கிழைக்கும் அவதூறு பிரச்சாரத்தை கைலாசா சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது. இந்த பொய்யான தகவலானது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இந்து பக்தர்களின் மத உணர்வுகளை காயப்படுத்தியுள்ளன.
70 முறை கொலை முயற்சி
இந்த தவறான தகவலை ஒருங்கிணைந்த முறையில் வெளியிடுவது, அதன் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை அதிகரிக்க ஒரு வேண்டுமென்றே உத்தியைக் குறிக்கிறது. இந்து விரோத சக்திகளால் நித்தியானந்தா மீது 70 க்கும் மேற்பட்ட படுகொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. நேரடி வழிகளில் தோல்வியடைந்த அவர்கள், இப்போது தவறான தகவல் போரை நாடுகிறார்கள், நித்தியானந்தா தனது உடலை விட்டு வெளியேறிவிட்டதாக தீங்கிழைக்கும் வதந்திகளைப் பரப்ப இந்துத்துவ ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்து எதிர்ப்பு கூட்டாளியின் ஊடகப் பிரிவால் இந்தப் பொய்யை விரைவாகப் பெருக்கி கொண்டாடுவது அவர்களின் ஆழமான நிகழ்ச்சி நிரலை அம்பலப்படுத்துகிறது” என கைலாசா டிவிட்டர் தளத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நான் உயிரோட இருக்கேனா? என் சந்தேகத்தை தீர்த்து வையுங்க pic.twitter.com/0MQvUwkH99
— KAILASA's SPH NITHYANANDA (@SriNithyananda) April 1, 2025
வீடியோ வைரல்?
அதோடு, “நான் உயிரோட இருக்கேனா? என் சந்தேகத்தை தீர்த்து வையுங்க” என்ற தலைப்பில் நித்தியானந்தா பேசுவது போன்ற வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அவர் இறந்துவிட்டதாக முன்பு ஒருமுறை செய்திகள் வெளியானபோது, நித்தியானந்தா கொடுத்த விளக்கம் இணைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் உகாதியின்போது உரையாற்றியதாகவும் நித்தியானந்தா பேசும் வீடியோ ஒன்று அந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கைலாசா தரப்பில் யாரையும் தொடர்புகொள்ள முடியாததால், இந்த பதிவுகளின் உண்மைத்தன்மை குறித்து உறுதி செய்யமுடியவில்லை.





















