மேலும் அறிய
Mayandi Kudumbathar 2 : தயாராகும் மாயாண்டி குடும்பத்தார் 2 படம்.. யார் இயக்குகிறார் தெரியுமா?
Mayandi Kudumbathar 2 : மாயாண்டி குடும்பத்தார் 2 படத்தை யுனைடெட் ஆர்ட்ஸ் தயாரிக்க கே.பி. ஜெகன் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மாயாண்டி குடும்பத்தார் 2 - கே.பி. ஜெகன்
1/6

குடும்ப உறவுகளை வைத்து உருவாகும் சென்டிமென்ட் படங்கள் என்றுமே பேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவரும். அந்த வகையில் 2009ம் ஆண்டு ராசு மதுரவன் எழுதி இயக்கிய 'மாயாண்டி குடும்பத்தார்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை யுனைடெட் ஆர்ட்ஸ் தயாரித்து இருந்தது.
2/6

குடும்ப கதையையும், பங்காளிகளுக்கு இடையே ஏற்படும் முதலையும் மிகவும் நேர்த்தியாக காட்சிபடுத்திய இப்படம் தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்படத்திற்கான இரண்டாம் விருதை பெற்றது.
3/6

மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தின் 2வது பாகத்தை தயாரிக்க யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய ராசு மதுரவன் புற்றுநோயால் உயிரிழந்ததால், இந்த பார்ட் 2வை கே.பி. ஜெகன் இயக்க உள்ளார். இவர் முதல் பாகத்தில் மகன்களில் ஒருவராக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
4/6

விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை மற்றும் கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, என் ஆளோட செருப்பைக் காணோம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் இயக்குநர் கே.பி. ஜெகன்.
5/6

முதல் பாகத்தில் மணிவண்ணன், பொன்னவண்ணன், கே.பி. ஜெகன், சீமான், ரவி மரியா, தருண் கோபி, ராஜ் கபூர், ஜி.எம்.குமார், நந்தா பெரியசாமி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். உருவாக இருக்கும் மாயாண்டி குடும்பத்தார் - 2 படத்திலும் முதல் பாகத்தில் நடித்த பலரும் நடிக்க உள்ளனர் என கூறப்படுகிறது.
6/6

விரைவில் இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் குறித்த முழுமையான விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்ஷன், திரில்லர், க்ரைம், காதல் படங்களாக பார்த்து போர் அடித்து போன ரசிகர்களுக்கு ஒரு நல்ல குடும்ப செண்டிமெண்ட் படம் நிச்சயம் ஒரு மாறுதலாக இருக்கும்.
Published at : 04 Jan 2024 01:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion