மேலும் அறிய

Gold Silver Rate Jan.20th: ஷாக் மேல் ஷாக் கொடுக்கும் தங்கம்; இன்று ஒரே நாளில் ரூ.3,600 உயர்வு; வெள்ளி கிராம் ரூ.22 அதிகரிப்பு

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் பொதுமக்களுக்கு அதிர்ச்சையை கொடுத்து வருகிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்துள்ளது. இதேபோல், வெள்ளி விலையும் கிராமிற்கு ரூ.22 உயர்ந்து ஷாக் கொடுத்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பொதுமக்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு 3,600 ரூபாய் விலை உயர்ந்து, சவரன் 1.11 லட்சம் ரூபாயை கடந்துள்ள நிலையில், மறுபுறம் வெள்ளியின் விலையும் கிராமிற்கு 22 ரூபாய் உயர்ந்து மக்களை கவலையடையச் செய்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.

ரூ.1.11 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை

தங்கத்தின் விலை கடந்த வாரத்தின் தொடக்கத்தில், அதாவது 12-ம் தேதி விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,120 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,04,960 ரூபாய் என்ற புதிய உச்ச விலையிலும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, 13-ம் தேதி மேலும் விலை உயர்ந்து, புதிய வரலாற்று உச்ச விலையை அடைந்தது. அதன்படி, கிராமிற்கு 50 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,170 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,05,360 ரூபாய்க்கும் விற்கப்பட்டது..

இந்நிலையில், 14-ம் தேதி கிராமிற்கு 110 ரூபாயும், சவரனுக்கு 880 ரூபாயும் விலை உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. அதன்படி, ஒரு கிராம் 13,280 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,06,240 ரூபாய் என்ற வரலாற்று புதிய உச்ச விலையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகை நாளான 15-ம் தேதி, மேலும் விலை உயர்ந்த தங்கம், ஒரு கிராம் 13,290 என்ற உச்ச விலையையும், ஒரு சவரன் தங்கம் வரலாற்று உச்ச விலையாக, 1,06,320 ரூபாயை எட்டியது.

இதைத் தொடர்ந்து, 16-ம் தேதி கிராமிற்கு 60 ரூபாய் விலை குறைந்த தங்கம், ஒரு கிராம் 13,230 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் விலை குறைந்து, ஒரு சவரன் 1,05,840 ருபாய்க்கும் விற்கப்பட்டது. பின்னர், வார இறுதியில், அதாவது சனிக்கிழமையான 17-ம் தேதி மீண்டும் ஏறுமுகத்திற்கு சென்று, ஒரு கிராம் 13,280 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,06,240 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 18-ம் தேதியும் அதே விலையில் நீடித்தது.

இந்நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்தில், அதாவது 19-ம் தேதியான நேற்று, மேலும் அதிரடியாக விலை உயர்ந்தது. அதன்படி, ஒரு கிராம் 13,450 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,07,600 ரூபாயாகவும் எகிறிது.

இன்று பேரதிர்ச்சி அளித்த தங்கம் - விலை என்ன.?

இந்த சூழலில், இன்று ஒரே நாளில், தங்கத்தின் வலை 3,600 ரூபாய் அதிகரித்து பேரதிர்ச்சி அளித்துள்ளது. காலையில் சவரனுக்கு 1,280 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,08,880 ரூபாய்க்கும், ஒரு கிராம் 160 ரூபாய் விலை உயர்ந்து 13,610 ரூபாய்க்கும் விற்பனையானது. 

இந்நிலையில், மாலையில் அதிரடியாக கிராமிற்கு மேலும் 290 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,900 ரூபாய்க்கும், சவரனுக்கு மேலும் 2,320 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,11,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் அதிர்ச்சி

இதேபோல், வெள்ளியின் விலையும் இன்று ஒரே நாளில் 22 ரூபாய் விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. சென்ற வாரத்தின் இறுதியில் கிராம் 310 ரூபாயாக இருந்த வெள்ளியின் விலை, இந்த வாரத்தில் தொடக்க நாளில், அதாவது 19-ம் தேதியான நேற்று 8 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 318 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வெள்ளியின் விலை இன்று காலையில் கிராமிற்கு 12 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 330 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில், மாலையில் கிராமிற்கு மேலும் 10 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 340 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget