ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
24 - ம் தேதி வரை சட்டப் பேரவை கூட்டத்துடன் நடைபெறும் என்றும், ஆளுநருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வதற்காக சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் கூறியதாவது ;
ஆளுநரை நேரில் சந்தித்து பேரவை கூட்டத் தொடருக்கு அழைப்பு கொடுத்து , சட்டப் பேரவைக்கு வருகை தந்த ஆளுநருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று தவறு எதுவும் பேரவையில் நடைபெறவில்லை. 234 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பேச பேரவையில் அனுமதி உள்ளது. ஆளுநர் உரையை வாசிப்பது கடமை. சபாநாயகர் பேசும் போது மற்றவர்களில் மைக் ஆப் செய்வது மரபு தான்.
24 - ம் தேதி வரை சட்டப் பேரவை கூட்டத் தொடர் நடைபெறும். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நாளை இரங்கல் குறிப்பு மற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பேரவை ஒத்தி வைக்கப்படும். 22 , 23 - ம் தேதிகளில் கேள்வி பதிலுடன் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும். 24ம் தேதி முதலமைச்சர் பதிலுரை அளிப்பார்.
ஆளுநர் அரசியல்வாதி அல்ல
ஆளுநர் அரசின் நிறை குறை குறித்து பேச அவர் அரசியல்வாதி அல்ல. அரசை மக்கள் விமர்சிப்பார்கள். அதற்கு ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியில் வந்து பல இயக்கம் இருக்கு அதில் எதாவது ஒன்றில் சேர்ந்து பேசலாம்.
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ?
ஆளுநர் உரையை ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் புறக்கணிப்பது குறித்த தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக அரசு முடிவு செய்யும். மத்திய அரசு பல நிதியை வழங்காமல் உள்ளது. ஆளுநருக்கு எதாவது குறை வைத்தோமா ?
இதன் மூலம் பேரவையின் மரபு மட்டும் அல்ல தமிழ்நாட்டின் மரபும் காப்பாற்றப்பட்டுள்ளது. மக்கள் பிரச்சனை நான்கரை ஆண்டுகளில் அரசு தீர்த்து வைத்துள்ளது , சட்டமன்றத்தில் மரபு ஒரு போதும் மாற்றப்படாது. யாருக்கும் பயந்து அரசு நடக்காது எனவும் திட்டவட்டமாக கூறினார்.





















