மேலும் அறிய

NDA TN Campaign: அதிமுக கூட்டணி அதிரடி! மதுராந்தகத்தில் 2 லட்சம் பேர்! மோடி வருகை: பரபரப்பான ஏற்பாடுகள்!

PM Modi NDA Meeting:: "மதுராந்தகத்தில் நடைபெற உள்ள, தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்ட ஏற்பாடுகள் என்னென்ன?. எவ்வளவு பேர் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்"

PM Modi NDA Rally Madurantakam: "செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில், 2 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது."

தேசிய ஜனநாயக கூட்டணி:

தமிழ்நாடு தேர்தல் களம் சூடு பிடித்து விட்டது. ஒவ்வொரு கட்சிகளும் தேர்தலுக்காக காய்களை நகர்த்தி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகியுள்ளது.

இந்த கூட்டணியில் பாஜக, அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உட்பட, தமிழக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்பாடுகள் என்னென்ன ?

மதுராந்தகத்தில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவிலான மைதானத்தில், மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதேபோன்று 10 ஏக்கர் பரப்பளவில், மூன்று ஹெலிகாப்டர்கள் தர இயங்குவதற்காக பிரம்மாண்டமான, எலிபேட் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கொடிகள் நடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வண்டலூரில் இருந்து மேல்மருவத்தூர் வரை பல்வேறு இடங்களில் வரவேற்பு பேனர்கள் வைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இரண்டு லட்சம் கூட்டணி கட்சித் தொண்டர்கள் ?

சுமார் 2 லட்சம் பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 3 மணி அளவில் இந்த கூட்டம் நடைபெறும் என்பதால், மேல் கூரை அமைக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொள்ளக்கூடிய பொதுக்கூட்டம் என்பதால், 7 அடுக்கு பாதுகாப்பு வரை போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை அருகே, தலைவர்கள் ஓய்வெடுக்கும் அறைகளும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கூட்டணி கட்சித் தலைவர்களில் தொடங்கி, பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் தொண்டர்கள் வரை அனைவருக்கும் அனுமதி அட்டை வழங்கப்பட உள்ளது. முழுமையான பரிசோதனை செய்த பிறகு ஒவ்வொருவரும் பொதுக்கூட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலந்து கொள்ள உள்ள தலைவர்கள் ?

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், பாரிவேந்தர், கூட்டணி உறுதியாக்கினால் டிடிவி தினகரன், ஏ.சி.சண்முகம், ஜான்பாண்டியன், உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Edappadi Palaniswamy: 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் ஜெயிப்பாரா? - இபிஎஸ் சொன்ன கணிப்பு!
Edappadi Palaniswamy: 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் ஜெயிப்பாரா? - இபிஎஸ் சொன்ன கணிப்பு!
Rahul Gandhi: ”சரி வாங்க பேசுவோம்” - தெறித்து ஓடிய மத்திய அமைச்சர்கள் - அலறவிட்ட ராகுல் காந்தி - வீடியோ வைரல்
Rahul Gandhi: ”சரி வாங்க பேசுவோம்” - தெறித்து ஓடிய மத்திய அமைச்சர்கள் - அலறவிட்ட ராகுல் காந்தி - வீடியோ வைரல்
TN Election 2026: திமுக Vs அதிமுக - கூட்டணிக்கு கொடுத்ததும், இழந்ததும் - ஏமாற்றும் தேசிய டூ மண்டல கட்சிகள்
TN Election 2026: திமுக Vs அதிமுக - கூட்டணிக்கு கொடுத்ததும், இழந்ததும் - ஏமாற்றும் தேசிய டூ மண்டல கட்சிகள்
DMK: “ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்” .. தேர்தல் பரப்புரை பாடலை வெளியிட்ட திமுக!
DMK: “ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்” .. தேர்தல் பரப்புரை பாடலை வெளியிட்ட திமுக!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |
Pattimandram Raja Caste Controversy | ’’நீங்க என்ன ஆளுங்க?’’பெண்ணிடம் சாதியைக் கேட்ட பட்டிமன்ற ராஜா
Annamalai RSS meeting | ”உங்ககிட்ட PLAN-ஏ இல்ல” ஓபனாக கேட்ட அண்ணாமலை! புது பதவி கொடுக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palaniswamy: 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் ஜெயிப்பாரா? - இபிஎஸ் சொன்ன கணிப்பு!
Edappadi Palaniswamy: 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் ஜெயிப்பாரா? - இபிஎஸ் சொன்ன கணிப்பு!
Rahul Gandhi: ”சரி வாங்க பேசுவோம்” - தெறித்து ஓடிய மத்திய அமைச்சர்கள் - அலறவிட்ட ராகுல் காந்தி - வீடியோ வைரல்
Rahul Gandhi: ”சரி வாங்க பேசுவோம்” - தெறித்து ஓடிய மத்திய அமைச்சர்கள் - அலறவிட்ட ராகுல் காந்தி - வீடியோ வைரல்
TN Election 2026: திமுக Vs அதிமுக - கூட்டணிக்கு கொடுத்ததும், இழந்ததும் - ஏமாற்றும் தேசிய டூ மண்டல கட்சிகள்
TN Election 2026: திமுக Vs அதிமுக - கூட்டணிக்கு கொடுத்ததும், இழந்ததும் - ஏமாற்றும் தேசிய டூ மண்டல கட்சிகள்
DMK: “ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்” .. தேர்தல் பரப்புரை பாடலை வெளியிட்ட திமுக!
DMK: “ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்” .. தேர்தல் பரப்புரை பாடலை வெளியிட்ட திமுக!
Toyota Highlander EV: அடிபொலி..! முதல் 7 சீட்டர் மின்சார எஸ்யுவி, 515KM ரேஞ்ச் - டொயோட்டா ஹைலேண்டர் - எப்படி இருக்கு?
Toyota Highlander EV: அடிபொலி..! முதல் 7 சீட்டர் மின்சார எஸ்யுவி, 515KM ரேஞ்ச் - டொயோட்டா ஹைலேண்டர் - எப்படி இருக்கு?
வேலைநிறுத்தம்: தமிழகத்தில் வங்கி, போக்குவரத்து முடங்குமா? 12 முக்கிய கோரிக்கைகள் & விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு!
வேலைநிறுத்தம்: தமிழகத்தில் வங்கி, போக்குவரத்து முடங்குமா? 12 முக்கிய கோரிக்கைகள் & விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு!
IND Vs Nam: கத்துக்குட்டி நமீபியாவை பந்தாடுமா இந்தியா? சஞ்சு சாம்சனுக்கான லாஸ்ட் சான்ஸ்? பாக்.,. அடிக்குமா?
IND Vs Nam: கத்துக்குட்டி நமீபியாவை பந்தாடுமா இந்தியா? சஞ்சு சாம்சனுக்கான லாஸ்ட் சான்ஸ்? பாக்.,. அடிக்குமா?
DMK Alliance: திமுக-வின் மாஸ்டர் ப்ளான்.. வெற்றிக்கு இதான் வழி! கூட்டணி கட்சிகள் என்ன பண்ணுமோ?
DMK Alliance: திமுக-வின் மாஸ்டர் ப்ளான்.. வெற்றிக்கு இதான் வழி! கூட்டணி கட்சிகள் என்ன பண்ணுமோ?
Embed widget