பெண்கள் மேல உரசக்கூடாது! அட்டைப்பெட்டியுடன் ஆண்கள்! வைரல் வீடியோ பரிதாபங்கள்
பேருந்தில் ஆண்கள் அட்டையால் மூடிக் கொண்டு பெண்களை உரசாத மாதிரி பயணம் செய்யும் வீடியோக்கள் ட்ரெண்டாகி வருகிறது. ஆண்களுக்கும் பாதுகாப்பில்லை, எங்களுக்கும் தனி ஆணையம் வேண்டும் என கேட்டு நூதன முறையில் பேருந்து மீம் வீடியோக்களில் இறங்கியுள்ளனர்.
கேரள மாநில கோழிக்கோட்டை சேர்ந்த 42 வயதான தீபக் என்பவர் பேருந்தில் பயணம் செய்யும் போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் செல்ஃபி வீடியோ எடுத்து வெளியிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில் அப்செட்டான தீபக் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடியோவை பார்க்கும் போது தீபக் மேல் தவறு இருப்பதாக தெரியவில்லை, லைக்ஸுக்காக அந்தப் பெண் தான் வேண்டுமென்றே இப்படி வீடியோ எடுத்துள்ளார் என விமர்சனம் செய்து வருகின்றனர். சோசியல் மீடியா மோகத்தால் ஒரு உயிர் பறிபோய் விட்டதாகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தற்கொலைக்கு தூண்டியதாக சம்பந்தப்பட்ட பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் ஆண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்ற குரல் கேரளாவில் எழுந்து வருகிறது. இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ஆண்கள் பேருந்தில் பெண்களை உரசாத படி அட்டை பெட்டியை மாட்டிக் கொண்டு பயணம் செய்து வருகின்றனர்.
அதேபோல் இந்த விவகாரம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்கள் ஒன்று கூடி அட்டைப் பெட்டியை மாட்டிக் கொண்டு பேரணி சென்றுள்ளனர். பேருந்து கண்டக்டரே எங்களுக்கும் ஆணையம் வேண்டும் என கேட்டு அட்டை பெட்டியை மாட்டிக் கொண்டு பேருந்தில் பயணித்துள்ளார்.
கேரளாவில் தீபக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் நூதன முறையில் இதுமாதிரியான வீடியோக்கள் வெளியாகி வருவது கவனம் பெற்றுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















