மேலும் அறிய
Snehan Blessed Twin Babies: 4 வருட காத்திருப்புக்கு கிடைத்தை இரட்டிப்பு மகிழ்ச்சி; ட்வின்ஸ் குழந்தைகளை பெற்றெடுத்த சினேகன் - கன்னிகா ஜோடி!
சினேகன் மற்றும் கன்னிகா தம்பதியினர் தங்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

சினேகன் - கன்னிகாவு ஜோடிக்கு இரட்டை குழந்தை பிறந்தது
1/5

தமிழ் சினிமாவில் இருக்கும் பாடலாசிரியர்களில் ஒருவர் தான் சினேகன். பாடலாசிரியராக மட்டும் இன்றி நடிகர், பின்னணி பாடகர் என்று பன்முக கலைஞராக சினிமாவில் காலூன்றி இருப்பவர். இந்த நிலையில் தான் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி கன்னிகாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.
2/5

இதையடுத்து சினிமா துறையில் வியக்க வைக்கும் தம்பதிகளில் ஒருவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள். எப்போதும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இருவரும் ரீல்ஸ் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
3/5

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கன்னிகா. சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த கன்னிகாவிற்கு ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த கன்னிகா கல்யாண பரிசு என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் பிக் பாஸ் தமிழ் ஆரம்பித்த போது முதல் சீசனுக்கு சென்ற சினேகன் பல வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வருவதாக கூறினார். ஆனால், அவரது பெயரை குறிப்பிடவில்லை.
4/5

இதையடுத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்த பிறகு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் கமல் ஹாசன் தலைமையில் நடைபெற்றது. கடந்த ஆண்டு மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சினேகன், அவருக்கு பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சியை கூட நடத்தி அழகு பார்த்தார்.
5/5

இந்த நிலையில் தான் தற்போது சினேகன் மற்றும் கன்னிகா தம்பதியினர், தங்களுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு கடந்த 25ஆம் தேதியே பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இது குறித்து சினேகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற" என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது. தாயே எந்தன் மகளாகவும் மகளே எந்தன் தாயாகவும் இரு தேவதைகள் 25.01.2025 அன்று பிறந்திருக்கிறார்கள் ... இதயமும், மனமும் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து நிரம்பி வழிகிறது. உங்களின் தூய அன்பினால் எங்கள் வாரிசுகளை வாழ்த்துங்கள். என்றும் அன்புடன் சினேகன் - கன்னிகா சினேகன். என்று பதிவிட்டுள்ளார்.
Published at : 30 Jan 2025 09:35 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
அரசியல்
அரசியல்
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion