மேலும் அறிய
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Keerthy Suresh Wedding: நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமண புகைப்படங்களின் தொகுப்பு இது.
கீர்த்தி சுரேஷ்
1/5

கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமணம் கோவாவில் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
2/5

திருமணம் மிக எளிமையாகவும் அதைதொடர்ந்து, பிரமாண்ட வரவேற்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
3/5

கொச்சியில் பள்ளி பருவத்தில் தன்னுடன் சேர்ந்து பயின்ற ஆண்டனி தட்டில் என்பவரை தான் கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும், பெற்றோர் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆண்டனி துபாயை மையமாக கொண்ட தற்போது பிஸினஸ் செய்து வருவதாகவும், கொச்சியில் பள்ளி படிப்பின்போது மலந்த காதல் 15 ஆண்டுகளை கடந்து தற்போது திருமணத்தை எட்டியுள்ளது. இருவருக்கும் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
4/5

ஆண்டனி, கீர்த்தி சுரேஷ் பெயரை இணைத்து ’நைக்கின் காதல்’ என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
5/5

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் இவர் நடித்த மகாநதி திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றார். தற்போது வருன் தவான் நடித்துள்ள பேபி ஜான் படத்தின் மூலம் இந்தியிலும் எண்ட்ரி கொடுக்கவிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் திருமணம் கொண்டாட்டம் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி, வாழ்த்துகள் கீர்த்தி...
Published at : 12 Dec 2024 03:32 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















