மேலும் அறிய

சாய் அப்யங்கரை சாடிய சந்தோஷ் நாராயணன் பதிவுக்கு ‘ஹாஹா’ கமெண்ட்...ஷான் ரோல்டன் விளக்கம்

சாய் அப்யரங்கரை கேலி செய்து சந்தோஷ் நாராயணனின் வீடியோ பதிவில் கமெண்ட் செய்தது குறித்து இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் விளக்கமளித்துள்ளார்

“சந்தோஷ் நாராயணனை பல ஆண்டுகளாக அறிந்திருப்பதால், அவரது பதிவில் இருந்தது வெறுப்பு அல்ல; நண்பர்களுக்கிடையிலான மகிழ்ச்சியான கேலி மட்டுமே என்பது எனக்குத் தெரியும். நாம் அனைவரும் ஒரு நகைச்சுவையை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்” என இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தெரிவித்துள்ளார்.

சாய் அப்யங்கரை சாடிய சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கரை கிண்டல் செய்யும் வகையில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் சர்ச்சையான நிலையில், அந்தப் பதிவுக்கு ஷான் ரோல்டன் “ஹாஹா” என கமெண்ட் செய்திருந்தார். இதையடுத்து சாய் அப்யங்கரின் ரசிகர்கள் ஷான் ரோல்டனையும் விமர்சிக்கத் தொடங்கினர். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஷான் ரோல்டன் தனது எக்ஸ் பக்கத்தில் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் வெளியிட்டிருந்த வீடியோவில், கானா பாடகர் ஒருவர் “Unplugged என்றால் என்ன?” என கேட்கிறார். அதற்கு சந்தோஷ் நாராயணன், “பாட்டு ஹிட் ஆகிடுச்சுன்னு நம்ப வைக்கிறதுக்கு” என பதிலளிக்கிறார். சாய் அப்யங்கர் தனது பாடல்களின் Unplugged வெர்ஷன்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதால், இந்தக் கிண்டல் அவரை குறிப்பிட்டே அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருதினர். இதனால் சந்தோஷ் நாராயணனின் பதிவு தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் உருவானது.

ஷான் ரோல்டனின் கமெண்ட் 

இந்தப் பதிவுக்கு ஷான் ரோல்டன் “Haha” என கமெண்ட் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து, சாய் அப்யங்கரை கிண்டல் செய்யும் பதிவை ஷான் ரோல்டனும் ஆதரிப்பதாகக் கூறி சிலர் அவரை எக்ஸ் தளத்தில் டேக் செய்து விமர்சித்தனர். சிலர் தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தியதாக ஷான் ரோல்டன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில், “நான் பொதுவாக கமெண்ட்களை படிப்பதில்லை. ஆனால் சிலர் என்னை டேக் செய்து, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் நான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நினைத்தேன்” என ஷான் ரோல்டன் கூறியுள்ளார்.

ஷான் ரோல்டன் விளக்கம்

மேலும், சந்தோஷ் நாராயணனை பல ஆண்டுகளாக தனக்கு தெரியும் என்றும், இருவருக்கும் இடையே உள்ள உறவை அறிந்திருப்பதால் அந்தப் பதிவை வெறுப்பு கொண்ட பதிவாக பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். “சந்தோஷை இத்தனை ஆண்டுகளாக அறிந்திருப்பதால், இந்தப் பதிவில் வெறுப்பு எதுவும் இல்லை என்பது எனக்குத் தெரியும். அது வெறும் மகிழ்ச்சியான கேலி மட்டுமே” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலைஞர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானது என்றும், அதற்காக அவர்களுக்குள் வெறுப்பு இருப்பதாக அர்த்தமில்லை என்றும் ஷான் ரோல்டன் தெரிவித்துள்ளார். “எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் முற்றிலும் வெறுப்பு இல்லை” என அவர் கூறியுள்ளார்.

தனது விளக்கத்தின் இறுதியில் “I drink from the well of love” என குறிப்பிட்டுள்ள ஷான் ரோல்டன், அனைவரும் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தாமல் அமைதியாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget