மேலும் அறிய
Kavin Lineup : கவின் காட்டில் அடைமழை... அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகும் ஸ்டார் நாயகன்!
Kavin Lineup : சரவணன் மீனாட்சி நாடகத்தில் வேட்டையனாக நடித்த கவின், தற்போது கோலிவுட் சினிமா உலகில் கலக்கி வருகிறார்.
நடிகர் கவின்
1/5

வினித் வரபிரசாத் இயக்கத்தில் கவின், அம்ரிதா ஐயர், பாலாஜி வேணுகோபால் உள்ளிட்ட பலர் நடித்த படம் லிஃப்ட். அலுவலகம் ஒன்றில் ஒரே நாள் இரவில் நடக்கும் அமானுஷ்ய செயல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ஓடிடியில் வெளியானது.
2/5

கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவான டாடா படத்தில் கவின், அபர்ணா தாஸ் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். பொறுப்பு இல்லாமல் இருக்கும் இளைஞன், பொறுப்புமிக்க தந்தையாக மாறுவதற்கு இடையில் என்ன நடக்கிறது என்பதே டாடா. இப்படத்தின் மூலம் கவினுக்கு திரை வெளிச்சம் கிடைத்தது.
3/5

நடன இயக்குநர் சதீஷ், கிஸ் எனும் படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்குகிறார். இதில் கவின், அயோத்தி படம் புகழ் ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்டோர் நடிக்க, அனிரூத் இசையமைப்பார் என்ற அறிவிப்பு முன்னதாக வந்தது.
4/5

மே 10 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் திரையுலகினர் பலரின் கவனத்தை ஈர்த்தது. சாதாரண குடும்பத்தை சார்ந்த கலைக்கு, நடிப்பின் மீது ஆர்வம் இருக்க, அந்த கனவுகளை நினைவாக்கும் வழியில் அவன் சந்திக்கும் சிக்கல்களும், கேலியும் கிண்டல்களுக்கும் படத்தின் கதையை வலுவாக்கும் வகையில் அமைந்துள்ளது.
5/5

இயக்குநர் நெல்சனின் தயாரிப்பு நிறுவனமான ஃபிளமண்ட் பிக்சர்ஸ், முதன்முதலாக கவினின் நடிப்பில் உருவாகும் மற்றொரு படத்தை தயாரிக்கவுள்ளது. சிவபாலன் முத்துக்குமார் இயக்கும் இந்த படத்திற்கு ப்ளடி பெக்கர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Published at : 04 May 2024 12:22 PM (IST)
Tags :
Kavinமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
ஆட்டோ
மதுரை





















