VJ Chitra Father Suicide | மீள முடியாத சோகம்..VJ சித்ரா தந்தை தற்கொலை! துப்பட்டாவில் பிரிந்த உயிர்..
சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் மகளின் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீரியல் நடிகை, விளம்பரம், ஆங்கர் என பல பரிணாமங்களில் சின்னத்திரையில் வலம் வந்தவர் விஜே சித்ரா. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
படப்பிடிப்புக்காக சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி அறையில் தங்கியிருந்த சித்ரா, அதிகாலையில் விடுதி அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். திருவான்மியூரில் வீடு இருந்தாலும் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் சூட்டிங் நடந்து வந்ததால் அவர் தனியார் விடுதியில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருடன் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ள ஹேமந்த் உம் தங்கியிரும்ந்துள்ளார்.
சித்ராவின் தற்கொலையை முதலில் பார்த்தது ஹேமந்த் தான். குளிக்க வேண்டும் என கூறி ஹேமந்தை வெளியே அனுப்பிய சித்ரா அறையில் தூக்கு மாட்டிக்கொண்டதாக ஹேமந்த் தரப்பில் கூறப்பட்டது. அதே சமயம் சித்ராவின் உடலில் கன்னம், கழுத்து ஆகிய பகுதிகளில் ரத்த காயம் இருந்ததால் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை காமராஜ் போலீஸில் புகார் கொடுத்தார்.
சித்ராவின் இறப்பில் வருங்கால மாப்பிள்ளை ஹேமந்த் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது ஏற்கனவே சித்ராவுக்கும் தனக்கும் பதிவு திருமணம் ஆகிவிட்டதாக தெரிவித்தார் ஹேமந்த், இந்நிலையில் திருமணமான 7 ஆண்டுகளுக்கும் பெண்ணுக்கு எந்த அசம்பாவிதம் நேர்ந்தாலும் கணவனே பொறுப்பு என்கிற பார்வையில் இந்த வழக்கு ஆர்டிஓ விசாரணைக்கு போனது.
இந்நிலையில் சித்ரா தற்கொலை வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அவரது தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் தற்கொலை மகள் சித்ராவின் துப்பட்டாவிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.