மேலும் அறிய
Indian 2: இந்தியன் 2வில் மீண்டும் அவ்வை சண்முகியாக மாறும் கமல்ஹாசன்..? வெளியான சுவாரஸ்யமான தகவல்!
Indian 2: இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசன் பெண் வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன்
1/6

கடந்த 1996-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், மீனா நடிப்பில் வெளியான படம் ‘அவ்வை சண்முகி’. இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் வயதான பெண் வேடத்தில் (சண்முகியாக) நடித்திருப்பார். நடை, உடல் மொழி அனைத்திலும் ஒரு பெண்ணைப் போலவே நடித்து அசத்தி இருந்தார் கமல். அவரது அந்த கதாபாத்திரமும், நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது.
2/6

இதையடுத்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2008-ஆம் ஆண்டு வெளியான ‘தசாவதாரம் திரைப்படத்தில் 10 வித்தியாசமான கெட்டப்களில் வரும் கமல் , கிருஷ்ணவேணி பாட்டி கதாபாத்திரத்தில் பெண் வேடமிட்டு நடித்திருப்பார்.
3/6

தற்போது, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், மறைந்த நடிகர்கள் நெடுமுடி வேணு, விவேக், மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
4/6

இந்நிலையில், தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு ‘இந்தியன் 2’ படத்துக்காக அவர் மீண்டும் பெண் வேடமிட்டு நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
5/6

படத்தின் முக்கியமான காட்சி ஒன்றுக்காக சிறிது நேரமே நீடிக்கும் பெண் தோற்றத்தில் கமல் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
6/6

இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Published at : 29 Jul 2023 01:51 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
வணிகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion