மேலும் அறிய
Jailer Varman Playlist :படத்துக்கு மியூசிக் போட்டது அனிருத் தான்..ஆனா ட்ரெண்ட ஆனதெல்லாம் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள்!
Jailer Varman Playlist : காவாலா, ஹுக்கும் பாடல்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது வர்மன் ப்ளேலிஸ்டில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள்.

வர்மன் பிளேலிஸ்ட்
1/6

ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியானது ஜெயிலர் படம். இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கூறிய காக்கா - கழுகு கதை, தயாரிப்பாளர் கலாநதி மாறனின் ஃபேன் பாய் தருணம், அரங்கத்தை அதிர வைத்த அனிருத்தின் பெர்ஃபார்மன்ஸ் என அனைத்தும் படத்திற்கான எதிர்ப்பார்ப்பை ஏகபோகமாக அதிகரித்தது.
2/6

தமன்னாவின் காவாலா நடனத்தை காண ஒருதரப்பு மக்களும், ஹுக்கும் பாடலில் ரஜினியின் மாஸ் சீன்களை பார்க்க மற்றொரு தரப்பினரும் திரையரங்கிற்கு செல்ல, எதிர்பாராத விதமாக அமைந்தது வில்லன் வர்மனின் ப்ளேலிஸ்ட்.
3/6

தனது எதிரியை நேரில் சந்திக்க செல்லும் ரஜினிக்கு, அல்கா யக்னிக் - உதித் நாரயண் குரலில் உருவான ’தால் சே தால்’ என்ற பாட்டை போட்டு வர்மனும், அவரது கூட்டத்தினரும் ஆடி தியேட்டர் ரசிகர்களை வைப் செய்ய வைத்தனர்.
4/6

இப்பாடலை முதன்முறையாக ஜெயிலர் படத்தில் கேட்ட மக்கள், அப்பாடல் பற்றிய தேடலை ஆரம்பித்து, சமூக வலைதளங்களில் பார்க்கும் இடமெல்லாம், மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
5/6

மற்றொரு முறை ரஜினி வர்மனை பார்க்க செல்லும் போது, கண்ணோடு காண்பதெல்லாம் பாடலை போட்டு வர்மன் அண்ட் கோ ஆட்டம் ஆடியிருப்பர். படத்தை பார்த்த மக்களிடம், ஜெயிலர் படத்தில் எந்த பாடல் பிடித்தது என்ற கேட்டால், வர்மனின் வைப் பாடல்கள்தான் பிடித்தது என்கிறார்கள். படம் வெளியாவதற்கு முன் ட்ரெண்டிங்கில் இருந்த காவாலா, ஹுக்கும் பாடல்களை தூக்கி சாப்பிட்டுவிட்டது வர்மனின் பாடல்கள்.
6/6

இவ்வாறு வர்மனின் ப்ளே லிஸ்டால் ஈர்க்கப்பட்ட நெட்டிசன்கள் மீம்ஸ்களையும் வீடியோ எடிட்டுகளையும் பறக்கவிட்டு வருகின்றனர்.
Published at : 18 Aug 2023 05:01 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement