மேலும் அறிய
Rohit Sharma : மைல்கற்களை தகர்த்தெறியும் இந்திய வீரர்கள்..புதிய சாதனையை படைத்தார் ஹிட்மேன் ரோஹித்..!
Rohit Sharma : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, கிரிக்கெட் உலகில் புதிய சாதனையை படைத்துள்ளார்.

ரோஹித் ஷர்மா
1/6

ஐ.சி.சி ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
2/6

இந்நிலையில் இன்று இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
3/6

டாஸை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும் சுப்மன் கில்லும் களம் இறங்கினார்கள்.
4/6

27 ரன்களுக்குள் 2 விக்கெட்டை இழந்து இந்திய அணி தத்தளித்த நிலையில் பொறுப்புடன் விளையாடினார் கேப்டன் ரோஹித் சர்மா.
5/6

அந்த வகையில் அதிரடியாக ஆடிய அவர் இன்றைய போட்டியின் 21வது ஓவரில் அடில் ரஷித் வீசிய பந்தில் பவுண்டரி அடித்ததன் மூலம் 18,000 ரன்களை கடந்த 5 வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
6/6

அதேபோல், 2023ல் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்த முதல் கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையையும் கை வசம் வைத்துள்ளார் ஹிட்மேன் சர்மா.
Published at : 29 Oct 2023 05:32 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement