மேலும் அறிய
Oscar Winners : களைக்கட்டிய ஆஸ்கர் திருவிழா..ஒரே கல்லில் 7 விருதுகளை வென்ற ஒரே படம்..மேலும் பல தகவல்கள் இதோ!
Oscar Winners: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் திருவிழாவில், யார் யார் என்னென்ன விருதுகள் வென்றனர் என்பதை பார்க்கலாம் வாங்க.
ஆஸ்கர் வெற்றியாளர்களின் பட்டியல்
1/10

சிறந்த நடிகைக்கான விருதினை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் படத்தில் நடித்திருந்த மிசெல் யோ பெற்றுக்கொண்டார்
2/10

அதே படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதினை கி ஹியூ க்யுவான் வென்றார்
3/10

சிறந்த துணை நடிகைக்கான விருதினை எவ்ரிதிங் எவ்ரிவேல் ஆல் அட் ஒன்ஸ் படத்தில் நடித்திருந்த ஜேமி லீ கர்டீஸ் பெற்றுக்கொண்டார்
4/10

சிறந்த இயக்கத்திற்கான விருதையும் இப்படம் பெற்றுள்ளது. இதற்கான விருதினை அப்படத்தின் இயக்குனர்கள் டேனியல் க்வான் மற்றும் டேனியல் ஷீனர்ட் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்
5/10

சிறந்த படம், சிறந்த துணை நடிகர்-நடிகை, சிறந்த நடிகைக்கான, சிறந்த இயக்கம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த எழுத்து ஆகிய பிரிவுகளில் மொத்தம் 7 விருதினை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படம் தட்டிச்சென்றுள்ளது.
6/10

சிறந்த நடிகருக்கான விருதினை தி வேல் படத்திற்காக பிரெண்டன் ஃப்ரேசர் பெற்றுக்கொண்டார்
7/10

சிறந்த இசைக்கான விருது ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலிற்கு கிடைத்தது. இந்த விருதினை அப்பாடலிற்கு இசையமைத்திருந்த எம்.எம்.கீரவானி மற்றும் அப்பாடலை எழுதிய சந்திர போஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்
8/10

சிறந்த டாக்குமெண்டரி குறும் படத்திற்கான விருது, இந்திய படமான தி எலிஃபெண்ட்ஸ் விஸ்பரர்ஸிற்கு கிடைத்தது
9/10

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸிற்கான விருது, அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்திற்கு கிடைத்தது
10/10

ஆல் குயட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட் திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு, இன்டர்நேஷனல் ஃபிலிம், சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் (இசை), சிறந்த ப்ரெடக்ஷன் டிசைன் ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதினை வென்றுள்ளது
Published at : 13 Mar 2023 03:11 PM (IST)
மேலும் படிக்க





















