மேலும் அறிய
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
”எதிர்கால கட்டங்களில் மதுரைக்கு நேரடி மற்றும் பெரிய அளவிலான முதலீடுகளை கொண்டு வர அரசு மற்றும் Guidance tamil nadu முன் இட்டு செயல்பட வேண்டும்” என தெரிவித்தனர்

மதுரையில் முதல்வர்
Source : whatsapp
மாநாட்டில் ரூ.36,000 கோடி முதலீட்டு அறிவிப்புகளும், 96-க்கும் மேற்பட்ட MOU களும் கையெழுத்தானாலும், மதுரை மாவட்டத்திற்கு கிடைத்தது வெறும் ரூ1,300 கோடி – மொத்த முதலீட்டின் 4% மட்டுமே.
மதுரை நிகழ்ச்சியில் முதல்வர்
மதுரையில் கடந்த 7-ஆம் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு தமிழக முதல்வர், தலைமையில் நடைபெற்றது. தென்தமிழகத்தின் முக்கிய நகரமாக விளங்கக் கூடிய மதுரை வரலாற்றுக் காலத்திலேயே தொழில்கேந்திரமாக விளங்கியப் பெருமையை உடையது. அதன் தொடர்ச்சியில் மதுரையைச் சிறந்த தொழில் நகரமாக மாற்றுவற்கு இந்த மாநாடு புதிய உத்வேகத்தையும் தரும் என தெரிவிக்கப்படுகிறது.
மதுரையில் தொழில் வளர்ச்சி
இந்த அடையாளங்களை மேலும் பெருமைப்படுத்தும் வண்ணமாகப் புது அடையாளம் தருவதைப் போல், தமிழகத்தின் Gate way to the south என்று சொல்லக்கூடிய அளவிற்கு மதுரையைத் தூய்மையான ஒரு தொழில்நகரமாக உருவாக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. அந்த முயற்சிகளின் விளைவாக ஏற்படுத்தப்பட்டதுதான் மேலூரில் வரவிருக்கும் சிப்காட் தொழிற்பூங்கா மாட்டுத் தாவணியில் அடுத்த ஆண்டு இறுதியில் திறப்பு விழா காணஇருக்கும் நியோ டைடல் பார்க். ஏறத்தாழ 25000 பேர் மதுரையில் ஐடி துறையில்மட்டும் வேலை பார்க்கிறார்கள். வருங்காலத்தில் இந்த எண்ணிக்கை கணிசமாகக் கூடும்.
மதுரையில் உட்கட்டமைப்பு வசதிகள்
சென்னை, கோவை போன்ற மாநகரங்கள் தற்காலத்தில் நிறைய நெருக்கடிகளைச் சந்திக்கின்றன. அங்கு நிலத்தின் விலை மிகுதியாக இருப்பதோடு நிலம் கிடைப்பதும் அரிதாக இருக்கிறது. மக்களின் வாழ்க்கைச் செலவு (cast of living) மிகுதியாகியிருக்கிறது. சேமிப்பு குறைந்து வருகிறது. எனவே இவற்றிற்கு அடுத்த நிலையில் தொழில் செய்வதற்கு மதுரைக்கு எல்லா விதமான உட்கட்டமைப்பும் பெற்றிருக்கிறது. இங்கிருந்து தூத்துக்குடி துறைமுகம் ஒன்றரை மணி நேர பயணம்தான். ரயில் தொடர்பும் சிறப்பாக இருக்கின்றது. மதுரையைச் சுற்றி நான்கு வழிச் சாலைகள் தொழில் செய்வதற்கு வசதியாக இருக்கின்றன. மதுரை விமான நிலையம் 12500அடி அகலப் படுத்த பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. 90 சதவீதம் பணிகள் முடிந்து மிக விரைவில் விமான நிலைய விரிவாக்கம் நடக்கவுள்ளது. இந்தக் காரணங்களால் மதுரையில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டுள்ளன. புது நிறுவனங்கள் தொழில் தொடங்கி வேலைவாய்ப்பினை உருவாக்க முக்கிய காரணியாக இந்த உட்கட்டமைப்பு இருக்கின்றது. இங்கு மக்களின் வாழ்க்கை செலவும் குறைவு. சிறப்பான உயர்கல்வி நிறுவனங்கள் நல்ல பள்ளிக் கூடங்கள் இருப்பதும் முக்கிய அம்சம். மதுரையைச் சொந்த ஊராகக் கொண்ட படித்த இளைஞர்கள் பட்டம் பெற்றபின் வேலைவாய்ப்பிற்காக மற்ற ஊர்களுக்குச் செல்லவேண்டி இருக்கிறது. இதனால் Brain drain ஏற்படுகிறது. அதைத் தடுக்கும் வகையில் இங்கேயே நிறுவனங்கள் வந்து வேலை வாய்ப்பு ஏற்படுத்தினார்கள் என்றால், மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கக் கூடிய ஏனைய மாவட்டங்கள், கிராமங்கள், வளர்ச்சியடையும். மதுரை வெறும் வரலாற்று நகரமாக மட்டுமல்லாமல் அடுத்த தொழில் புரட்சியில் முக்கிய பங்கு வகிப்பதற்கு எல்லாவிதமான சாத்தியக் கூறுகளும் உள்ளன.
ரூ1,300 கோடி – மொத்த முதலீட்டின் 4% மட்டுமே
இந்நிலையில் மதுரை இளைஞர்கள் சார்பில் நம்மிடம் பேசிய (Madurai Infra & Development Association) அமைப்பின் தலைவர், MID பாலமுருகன் பழனி கூறுகையில்...,” முதன்முறையாக முதலீட்டு மாநாட்டை மதுரையில் நடத்தித்தந்த தமிழக முதல்வர், தொழில் துறை அமைச்சர்கள் மற்றும் Guidance Tamil Nadu குழுவிற்கு இதயபூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தென் தமிழகத்திற்கு அண்மைக் காலங்களில் தொடர்ச்சியாக முதலீடுகள் வரத் தொடங்கியிருப்பது, பிராந்திய வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெரும் ஆதரவாக உள்ளது. இதே நேரத்தில், சமீபத்தில் நடைபெற்ற ‘TN Rising Madurai 2025’ நிகழ்ச்சியின் முடிவுகள் எங்களை ஓரளவு ஏமாற்றமளித்தன. இந்த மாநாட்டில் ரூ.36,000 கோடி முதலீட்டு அறிவிப்புகளும், 96-க்கும் மேற்பட்ட MOU களும் கையெழுத்தானாலும், மதுரை மாவட்டத்திற்கு கிடைத்தது வெறும் ரூ1,300 கோடி – மொத்த முதலீட்டின் 4% மட்டுமே. இது கவலையளிக்கும் விஷயம்.
முதலீட்டுகளில் அதிக பங்கு வழங்கப்பட வேண்டும்
அதிலும் முக்கியமாக, பெரிய அளவிலான Tech நிறுவனங்களோ, Manufacturing துறையின் மகத்தான முதலீட்டுகளோ மதுரைக்கு வரவில்லை. அறிவிக்கப்பட்ட முக்கிய முதலீடுகள் பெரும்பாலும் பிற மாவட்டங்களுக்கு சென்றன. தென் தமிழகத்தின் மைய நகரமாகவும், முக்கிய பொருளாதார மண்டலமாகவும் விளங்கும் மதுரைக்கு, உயர்ந்த மதிப்புள்ள Tech, IT, Industrial மற்றும் Manufacturing முதலீட்டுகளில் அதிக பங்கு வழங்கப்பட வேண்டும். எதிர்கால கட்டங்களில் மதுரைக்கு நேரடி மற்றும் பெரிய அளவிலான முதலீடுகளை கொண்டு வர அரசு மற்றும் Guidance tamil nadu முன் இட்டு செயல்பட வேண்டும்” என வலியுறுத்துகிறோம்.”
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















