மேலும் அறிய
Andhagan Posters : வாழ்த்து போஸ்டர்களிலே படம் காட்டும் அந்தகன் படக்குழு..எப்போதான் படம் வெளியாகும்?
Andhagan Posters : பண்டிகை நாட்களில் ஸ்பெஷல் போஸ்டர்களை மட்டும் வெளியிட்டு வரும் அந்தகன் படக்குழுவை நெட்டிசன்கள் ட்ரால் செய்து வருகின்றனர்.

அந்தகன் போஸ்டர்கள்
1/9

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் 2018ல் வெளியான அந்ததூன் எனும் க்ரைம் த்ரில்லர் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
2/9

இதன் வெற்றியையடுத்து, இப்படத்தின் தமிழ் வெர்ஷனை ஜெயம் ரவியின் அண்ணனான மோகன் ராஜா இயக்கவிருந்தார்.
3/9

ஒரு சில காரணங்களால் அவர் அப்படத்தை எடுக்கவில்லை.
4/9

பின்னர், பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் இப்படத்தை இயக்கினார்.
5/9

இப்படத்தில் தன் அன்பு மகனான பிரசாந்தே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.
6/9

அந்தகன் என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் அறிவிப்பு வந்த முதல் நாளிலிருந்து ஒவ்வொரு பண்டிக்கைக்கும் விடாமல் ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறது அக்குழு.
7/9

இதுவரை இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் மட்டுமே வெளியானது. கடந்த மே மாதம், இரண்டாம் சிங்கிள் குறித்த அப்டேட் வந்தது.
8/9

டீசர், ட்ரெய்லர் என எதுவும் வெளியாகவில்லை. இதனால் கடுப்பான நெட்டிசன்கள் இந்த படக்குழுவை ட்ரால் செய்து வருகின்றனர்.
9/9

கடந்த ஓணம் பண்டிகையிலிருந்து போஸ்டர் பதிவிட்டு வரும் இக்குழு இந்தாண்டின் ஓணம் விழாவிற்கும் வாழ்த்து போஸ்டர் ஒன்றை பதிவிட்டுள்ளனர். “ஷூட்டிங் நடந்ததா? இல்லையா?, எப்போதுதான் படம் வெளியாகும்?, போஸ்டரிலே படம் காட்டிட்டு வராங்க..” போன்ற கமெண்ட்ஸ் இணையத்தில் உலா வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதியோ முக்கிய அறிவிப்போ வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.
Published at : 29 Aug 2023 04:46 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion