மேலும் அறிய
Celebrities Pongal Celebration : இனிதினிதாய் பொங்கல் கொண்டாடிய தமிழ் சினிமா பிரபலங்கள்!
Celebrities Pongal Celebration : உலகெங்கும் பொங்கல் கொண்டாடி வருபவர்களுக்கு, தமிழ் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஸ்பெஷல் பதிவை பகிர்ந்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டின் பொங்கலை கொண்டாடிய சினிமா பிரபலங்கள்
1/7

“அனைவரும் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதியுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; ஒழுக்கம் மற்றும் சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.” - ரஜினியின் பொங்கல் வாழ்த்து.
2/7

“இயற்கையை வாழ்த்தும் நாள், உழைப்பில் உதவும் சக உயிர்களுக்கு நன்றி சொல்லும் நாள், விதைத்த பொருளின் விளைச்சலைப் பார்த்து விம்மிதம் கொள்ளும் நாள், சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக்கொண்டாடும் நாள் என மகிழ்வுகளை அள்ளிவரும் தைப்பொங்கல் நாளில் உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” - கமலின் எக்ஸ் தள பதிவு
3/7

நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் பொங்கல் வைத்து புகைப்படம் பகிர்ந்து தனது வாழ்த்தினைப் பகிர்ந்துள்ளார்.
4/7

நடிகர், நடன இயக்குநர் பிரபு தேவா, நண்பர்களுடன் இணைந்து வீடியோ பதிவாக பொங்கல் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
5/7

நடிகர் சரத் குமார் மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் இருவரும் தங்கள் மகள் ரேயான் மிதுனுக்கு பொங்கல் சீர் வழங்கும் வகையில் வீடியோ பகிர்ந்துள்ளனர்.“என் பெற்றோர் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பொங்கல் சீர் தருவார்கள், அவர்கள் தரும் பொருள்களை விட அன்பு தான் மிக முக்கியம்” என ரேயான் பதிவிட்டுள்ளார்.
6/7

நடிகர் தனுஷ் இணையத்தில் தன் மகன்கள் மற்றும் பெற்றோர் என குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.
7/7

“இந்த பொங்கல்..அயலான் பொங்கல்..” மனைவி, பிள்ளைகளுடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்பெஷல் கிராபிக்ஸ் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
Published at : 15 Jan 2024 12:54 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion