செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
Chembarambakkam Lake: "செம்பரம்பாக்கம் நீர் பிடிப்பு பகுதியில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது"

Chembarambakkam Tank: "செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து புயல் காரணமாக, தொடர்ந்து மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது"
புயல் எச்சரிக்கை - Ditwah Cyclone
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மிதமான முதல் கனமழை வரை கொட்டித்தீர்த்து வருகிறது. இப்படியான நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரை செய்த டிட்வா பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் 20 செமீ மேல் மழை பதிவாகும் அபாயம் உள்ளதால் வானிலை மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி - Chembarambakkam Lake
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். இன்றைய நிலவரப்படி (01-12-2025) நீர் இருப்பு 21.35 அடியாகவும், கொள்ளளவு 2947 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து இரவு 8 மணி நிலவரப்படி 1444 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 23 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.




















