TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN weatherman Cyclone Update: (02-12-2025): வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலையானது 18 மணி நேரத்திற்கு சென்னை அருகிலேயே நீடிக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

TN weatherman Cyclone Update: (02-12-2025): வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, சென்னை,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடரும் என தெரிவித்துள்ளார்.
18 மணி நேரம் நீடிக்கும் - வெதர்மேன்
தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் காற்றழுத்த தாழ்வுநிலையின் நிலவரம் தொடர்பான விவரங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ”கடந்த 24 மணி நேரமாக, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும் டிட்வா, சென்னை கடற்கரைக்கு அருகில் உள்ளது. இதனால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 18 மணி நேரம் சென்னை கடற்கரைக்கு அருகிலேயே இந்த காறழுத்த தாழ்வுநிலை இருக்கும் எனவும், பின்னர் மாலை முதல் இரவு வரை கல்பாக்கம் பகுதியை சுற்றி சென்னைக்கு தெற்கே கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பு சென்னை அட்சரேகைக்கு மேல் நகரவில்லை. சென்னை அட்சரேகைக்கு கீழே இருக்கும் வரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாள் முழுவதும் ஒன்றன் பின் ஒன்றாக மேகங்கள் உருவாகி மழை தொடரும்.
மிதமான மழைக்கு வாய்ப்பு:
உள்வரும் மழை மேகங்களானது தெற்கு தமிழகத்தை கடந்து டெல்டா கடற்கரைக்கு செல்கிறது. எனவே மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், பாண்டி, கடலூர் விழுப்புரம் பெல்ட்டிலும் தனிமைப்படுத்தப்பட்ட மழை பெய்யக்கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் மழை பெய்யும்.
Weather Outlook for 02.12.2025 to 03.12.2025 - Good morning all
— Tamil Nadu Weatherman (@praddy06) December 2, 2025
------------------------------------------
Summary -The ex-Ditwah now as a Deep Depression is lying close to Chennai coast for last 24 hours and has brought extreme rains to parts of Chennai and Tiruvallur… pic.twitter.com/zYYKQzdvhz
மிக கனமழைக்கு வாய்ப்பு:
செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மீண்டும் மாலை முதல் இரவு வரை சென்னைக்கு தெற்கே இந்த அமைப்பு கடக்கும். இதனால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என பிரதீப் ஜன எச்சரித்துள்ளது.





















