TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்
காலை முதல் கனமழை:
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் `நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழுந்த நிலையில் சென்னையில் நேற்று பெரிய அளவில் மழை பொழியவில்லை, இந்த நிலையில் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழையானது வெளுத்து வாங்கி வருகிறது.
காலையில் கனமழை பெய்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறையானது அளிக்கப்படவில்லை, இதனால் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர். மேலும் சில தனியார் பள்ளிகள் தாமாக முன் வந்து அரை நாள் விடுமுறை அளித்தனர்
ரெட் அலர்ட்:
சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் 20 செமீ மேல் மழை பதிவாகும் அபாயம் உள்ளதால் வானிலை மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் இன்று இரவு 7 மணி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், அரியலூர், திருச்சி, தேனி, புதுக்கோட்டை, கோவை ஆகிய மாவட்டங்களிலும் இரவு வரை மழைக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.






















