மேலும் அறிய
AR Rahman Concert : இசை புயலுக்கே இந்த நிலைமையா..? ஏ.ஆர்.ரஹ்மானுக்கு குரல் கொடுக்கும் திரை பிரபலங்கள்!
AR Rahman Concert : ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி தொடர்பான பிரச்சினைக்கு திரை பிரபலங்கள் சிலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஏ.ஆர். ரஹ்மான்
1/6

ஏ.ஆர் ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யராம் மைதானத்தில் நடைப்பெற்றது.எதிர்பாராத விதமாக அங்கு குளறுபடிகள் ஏற்பட்டது.
2/6

இதனால் மக்கள் பலர் ஏ.ஆர்.ரஹ்மானின் மீது குற்றச்சாட்டு வைத்தனர். இசை நிகழ்ச்சியை நடத்திய ACTC Events நிறுவனமும் ஏ.ஆர்.ரஹ்மானும் இதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று ட்வீட் செய்தனர். இருப்பினும், ஏ.ஆர்.ரஹ்மானை ஓயாமல் குறை கூறி வருகின்றனர் மக்கள். தற்போது இந்த பிரச்சினைக்கு திரை பிரபலங்கள் சிலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
3/6

“மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு, ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்; என் குடும்பத்தினரும் அந்த கான்செர்டில் பிரச்சினைகளுக்கிடையே கலந்து கொண்டனர்; இருப்பினும் ரஹ்மானுக்கு துணை நிற்கிறேன்; நம் மீது ரஹ்மான் அன்பு செலுத்துவது போல, ரசிகர்களும் வெறுப்பை தவிர்த்து, அன்பை தேர்ந்தெடுங்கள்.” - நடிகர் கார்த்தியின் ட்வீட்
4/6

“ரஹ்மான் எப்போதும் தனது ரசிகர்கள் ஏமாற்றமடையாமல் பார்த்துக்கொள்கிறார்; டயமண்ட் பாஸ் இருந்தும் எனது மகளும் அவளுடைய நண்பர்களும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை; இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது; ரசிகர்கள் எதிர்க்கொண்ட பிரச்னைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பொறுப்பேற்க முடியாது; நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தோல்வியே இதற்கு காரணம்” - நடிகை குஷ்புவின் ட்வீட்
5/6

ஆர்.ரஹ்மானுக்கு சப்போர்ட் செய்யும் வண்ணம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு பெரிய நிகழ்வை ஒழுங்காக நடத்துவது என்பது அடிப்படையில் மிகவும் சிக்கலான பணியாகும். தேவையான உபகரணங்களை ஏற்றி இறக்குவது, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, போக்குவரத்தைக் கண்காணிப்பது உள்ளிட்ட பல சவால்கள் அதில் இருக்கும். மேலும் இதுபோன்ற நிகழ்வுகளில் கூட்ட நெரிசல் போன்ற இன்னல்கள் துரதிர்ஷ்டவசமாக ஏற்படுவது உண்டு. இதற்கு நிர்வாகத் தவறுகள் காரணமாக இருந்திருக்கிறது. அதேசமயம் நல்ல நோக்கத்தில் பெரிய அளவில் முன்னேற்பாடுகள் செய்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்துவிடுவது உண்டு. இது எங்கள் இசையை அர்த்தமுள்ளதாக மாற்றும் ரசிகர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தி விடுகின்றது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் இந்தச் சம்பவத்தின் காரணங்களைக் கூராய்வு செய்து தவறுகளை சரி செய்ய வேண்டும். மேலும் கலைஞர்களாகிய நாங்கள் மேடையில் இருக்கும்போது எல்லாமே சரியாக நடக்கும் என்றும், ரசிகர்கள் நல்ல முறையில் கவனிக்கப்படுவார்கள் என்றும் விழா ஏற்பாட்டாளர்கள் மீது முழு நம்பிக்கை வைக்கிறோம். இதுபோன்ற ஒரு சூழலுக்கு ரசிகர்கள் தள்ளப்படுவதைக் காண்பது உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் கலைஞர்களாகிய எங்களை, இன்னும் ஒரு படி அதிகம் சென்று திட்டமிட வேண்டும் என்பதையும் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கிறது. சக இசையமைப்பாளர் என்ற முறையில், இந்த கடினமான சூழலில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக நிற்கிறேன். அவரது ரசிகர்களுக்கு சிறப்பான மறக்க முடியாத இரவாக அமைந்திருக்க வேண்டும். இதிலிருந்து பாடங்கள் கற்றுக் கொண்டு வரும் காலத்தில் மேம்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்” என யுவன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
6/6

தனது தந்தைக்கு நேர்ந்த பிரச்சினைக்கு கதீஜா ரஹ்மான் குரல் கொடுத்துள்ளார். “சமூக வலைதளங்களில், ஏ.ஆர்.ரஹ்மானை மோசடிக்காரர் போல் சித்தரித்து, மலினமான அரசியல் செய்து வருகின்றனர். குளறுபடிகளுக்கு ஏற்பாட்டாளர்களே முழு காரணம். இருப்பினும் ரஹ்மான் பொறுப்பேற்று கொண்டார். சிந்தித்து பேசவும்.” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் கதீஜா. அத்துடன், முன்பு நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சிகள், நிதி திரட்டுவதற்காக சமூக அக்கரையுடன் நடத்தப்பட்டது என்பதையும் அவர் தெளிவாக பதிவிட்டுள்ளார்.
Published at : 12 Sep 2023 12:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion