மேலும் அறிய
Bigg Boss Tamil 7 : அடித்து கொண்ட கைகள் அணைத்துக்கொண்டது..இந்த வார பிக்பாஸில் இப்படி ஒரு மாற்றமா?
Bigg Boss Tamil 7 : கடந்த வாரத்தில் ரண களமாக இருந்த பிக்பாஸ் வீடு இந்த வாரம் சற்று சாந்தமாகியுள்ளது.

பிக்பாஸ் 7 ப்ரோமோ காட்சிகள்
1/6

கடந்த வாரத்தில் போட்டியாளர் ஐஷு குறைந்த வாக்குகளை பெற்று எவிக்ஷன் முறையில் வெளியேற்றப்பட்டார்.
2/6

இன்று வந்த முதல் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான டாஸ்க் குறித்த காட்சிகள் இடம்பெற்று இருந்தது. டாஸ்க்கில் தோற்றுவிட்டால், பெரிய பிக்பாஸ் வீட்டில் இருக்கும் படுக்கறைக்கு அனுமதி வழங்கப்படாது எனும் பெரும் குண்டை பிக்பாஸ் தூக்கிப்போட்டு போட்டியாளர்களை கலங்கடித்தார்.
3/6

அதனை அடுத்து வந்த இரண்டாவது ப்ரோமோவில் லட்டு கொடுக்கும் டாஸ்க் தொடர்பான காட்சிகள் இருந்தது. தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஸ்வீட் கொடுக்கலாம் என சொல்லப்பட்டது. இதில் விசித்திராவிற்கு லட்டு கொடுத்துவிட்டு அட்டாக் செய்துவிட்டார் ஜோவிகா. ‘லட்டுல வச்சனு நினைச்சியா தாஸ்.. நட்டுல வச்சேன்..’ என்ற வசனத்திற்கு ஏற்ப அந்த ஸ்வீட்டிலும் மற்றொரு ட்விஸ்டை வைத்தார் பிக்பாஸ்.
4/6

கடந்த வாரத்தில் எலியும் பூனையுமாக அடித்துக்கொண்ட கைகள் அனைத்தும் பிரதீப் ரெட் கார்ட் விவகாரத்திற்கு பிறகு அணைத்த கைகள் ஆகிவிட்டது. வார இறுதியில் கமல் நடத்திய பஞ்சாயத்தில் மக்களின் ரெஸ்பான்ஸை சூதனமாக புரிந்து கொண்ட போட்டியாளர்கள் தங்களின் ஸ்ட்ராடஜியை மொத்தமாக மாற்றிவிட்டனர்.
5/6

தற்போது வந்த மூன்றாவது ப்ரோமோவில் விசித்தரா, ஜோவிகா டாக்சிக் கேங்குடன் இருக்கிறார் என கூல் சுரேஷ், தினேஷ், அர்ச்சனா ஆகியோரிடம் பேசியுள்ள காட்சி இடம்பெற்றுள்ளது.
6/6

இரண்டாவது ப்ரோமோவில் ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும், பிக்பாஸ் வீடு இரு கேங்காக பிரிந்து இருப்பது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Published at : 14 Nov 2023 03:40 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion