மேலும் அறிய

Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!

நான் அமெரிக்காவில் படித்து செட்டிலாகி குழந்தைகள் பெற்று அவர்கள் கல்லூரி போன பிறகு இந்தியா திரும்பி ஒரு வீடு வாங்கி செட்டிலாக வேண்டும் என கனவுடன் இருந்தேன் என ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

சினிமாவை விட்டு என்னால் போக முடியவும் முடியவில்லை, பெரிய வெற்றியையும் பார்க்கவில்லை என நடிகை ஐஸ்வர்யா வருத்தம் தெரிவித்துள்ளார். 

ஒரு நேர்காணலில் பங்கேற்ற அவர், “என் அம்மா லட்சுமி மிகப்பெரிய பிரபலமாக இருந்தபோதும் நான் நடிகையாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதில்லை. எனக்கு அந்த முக லட்சணம் இல்லை என சொல்வார்கள். நான் நன்றாக படிப்பேன். அம்மா கேமரா முன்னால் படும் கஷ்டத்தைப் பார்த்திருக்கிறேன். என்னை டிஸ்னி படங்கள் பார்க்க தான் அவர் அனுமதித்தார். சினிமாத்துறை எப்படி, நடிகைகளை என்னவெல்லாம் சொல்வார்கள் என்பதையும் நான் அறிந்து வைத்திருந்தேன். அதனால் எனக்கு விருப்பமே இல்லாமல் இருந்தது.

கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டேன்

நான் டாக்டர் ஆவேன் என நினைத்தார்கள். ஆனால்  எலியைப் பார்த்து பயந்து மயங்கியதால் வேறு ஏதாவது படிக்க வையுங்கள் என பேமிலி டாக்டர் அட்வைஸ் பண்ணினார். சரி மருத்துவம் சார்ந்த ஊட்டச்சத்து நிபுணருக்கு படிக்கலாம் என சேர்ந்தேன். 

என்னுடைய போதாத நேரம் நான் கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன். நான் அதை வேண்டுமென்றே செய்யவில்லை. தாமிரமும் சல்பூரிக் அமிலமும் சேர்ந்து காப்பர் சல்பேட் உப்பை உருவாக்க வேண்டும். இதற்காக இரண்டையும் சூடாக்கும்போது அது வெடித்து விட்டது. பக்கத்தில் இருக்கும் மாணவி பயத்தில் கத்தி அவளுடையதை தட்டி விட மொத்தமாக அந்த ஆய்வகம் தீப்பிடித்து விட்டது. அதனால் பள்ளி முதல்வர் இந்த துறையே வேண்டாம் என கூறினார். இதனால் நான் பொலிடிக்கல் சயின்ஸ் பிரிவை எடுத்து சட்டம் படிக்க முடிவு செய்தேன். 

பெரிய வெற்றியைப் பார்க்க முடியல

கல்லூரிக்கு விண்ணப்பித்த அத்தனை இடங்களிலும் சீட் கிடைத்தது. அப்போது மாதுரி தீட்சித் நடித்த ஏக் தோ தீன் பாடலுக்கு நான் நடனமாடினேன். அப்போது வீட்டில் இயக்குநர் சிவச்சந்திரனுக்கு ஆடிக் காட்டி விட்டேன். அப்படத்தின் ஆடிஷனுக்கான வசனத்தை நான் கேட்டு கேட்டு மனப்பாடம் செய்து அவருக்கு நடித்து காட்டினேன். எங்க அம்மாவுக்கு நடிப்பு வரவில்லை என நான் சொன்னதும் அவர் என்னை நடித்துக் காட்ட சொன்னார். 

நான் நடித்ததும் சிவசந்திரன் ஓகே சொன்னார். நான் அமெரிக்காவில் படித்து செட்டிலாகி குழந்தைகள் பெற்று அவர்கள் கல்லூரி போன பிறகு இந்தியா திரும்பி ஒரு வீடு வாங்கி செட்டிலாக வேண்டும் என கனவுடன் இருந்தேன். கடைசியில் ஒரு படம் நடிக்க சொல்லி அவர் கேட்க, நானும் ஓகே சொல்ல இன்று வரை அதுதான் பிழைப்பாக சென்று கொண்டிருக்கிறது. என்னால் போகவும் முடியவில்லை, பெரிய வெற்றியைப் பார்க்க முடியவில்லை என ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth: அகிலா கேட்டு அடம்பிடித்த ரஜினிகாந்த்.. மனம் திறந்த கே.எஸ்.ரவிக்குமார்!
Rajinikanth: அகிலா கேட்டு அடம்பிடித்த ரஜினிகாந்த்.. மனம் திறந்த கே.எஸ்.ரவிக்குமார்!
Ashok Selvan:
Ashok Selvan: "நீங்க எல்லாம் முத்தம் கொடுத்ததே இல்லயா..?" கடுப்பான அசோக் செல்வன்! நடந்தது என்ன?
ஜேசன் சஞ்சையிடம் பேசி இருக்கேன் அவர் இனிமையானவர் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - மதுரையில் நடிகர் அசோக் செல்வன் பேட்டி.
ஜேசன் சஞ்சையிடம் பேசி இருக்கேன் அவர் இனிமையானவர், அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - மதுரையில் நடிகர் அசோக் செல்வன் பேட்டி.
Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்திக்.. ஊருக்குள் வரவிடாமல் தடுக்கும் சிவனாண்டி..! கார்த்திகை தீபத்தில் இன்று ஒரு மணி நேரம்!
Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்திக்.. ஊருக்குள் வரவிடாமல் தடுக்கும் சிவனாண்டி..! கார்த்திகை தீபத்தில் இன்று ஒரு மணி நேரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெட்டி பாமா.. பல்டி பாமா.. தவெக வேட்பாளரை Body Shaming செய்த மு.க.ஸ்டாலின்!
MK Stalin: பெட்டி பாமா.. பல்டி பாமா.. தவெக வேட்பாளரை Body Shaming செய்த மு.க.ஸ்டாலின்!
CM Vijay:
CM Vijay: "ட்ராக்டர் ஓட்டி.. டீ குடிச்சு.." மதுராந்தகம் தொகுதியில் சுத்தி, சுத்தி ஓட்டு கேட்ட விஜய்!
TVK Vs DMK: இங்க பாருங்க உதயநிதி.. ஸ்டாலினுக்கு நடந்தது தான் உங்களுக்கும்.. எச்சரிப்பது யார் தெரியுமா?
TVK Vs DMK: இங்க பாருங்க உதயநிதி.. ஸ்டாலினுக்கு நடந்தது தான் உங்களுக்கும்.. எச்சரிப்பது யார் தெரியுமா?
School Holiday: ஹேப்பி நியூஸ்.. பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?
School Holiday: ஹேப்பி நியூஸ்.. பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?
CM Vijay: வெற்றிப் பயண திட்டம் - கோயம்பேட்டில் தொடங்கி வைத்த CM விஜய் - முக்கிய நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு
வெற்றிப் பயண திட்டம் - கோயம்பேட்டில் தொடங்கி வைத்த CM விஜய் - முக்கிய நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு
Samsung Galaxy A08 Launched: 6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
Free Bus For Women : எந்த எந்த பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.! எவ்வளவு தூரம் செல்லலாம்-தமிழக அரசின் குட் நியூஸ்
எந்த எந்த பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.! எவ்வளவு தூரம் செல்லலாம்-தமிழக அரசின் குட் நியூஸ்
Maruti Fronx with ADAS: இளம் தலைமுறையின் ப்ரியமான காரில் ADAS தொழில்நுட்பம்; Fronx காரின் பாதுகாப்பை அதிகரிக்கும் மாருதி
இளம் தலைமுறையின் ப்ரியமான காரில் ADAS தொழில்நுட்பம்; Fronx காரின் பாதுகாப்பை அதிகரிக்கும் மாருதி
Embed widget