மேலும் அறிய

“உனக்கு ஹீரோயினை எங்கிருந்து தேடுவது?” – நடிகராக ரகுவரனுக்கு தடையாக அமைந்தது எது தெரியுமா?

சினிமாவில் அறிமுகமானபோது தனது உயரத்தால் நிராகரிக்கப்பட்ட ரகுவரன், பின்னர் அதையே தனது தனித்துவமான அடையாளமாக மாற்றியது எப்படி?

தமிழ் சினிமாவில் சில நடிகர்களின் தோற்றமே அவர்களுக்கான அடையாளமாக மாறிவிடும். அப்படிப்பட்ட நடிகர்களில் ரகுவரனும் ஒருவர். தனித்துவமான குரல், வித்தியாசமான உடல்மொழி, அமைதியாகவே அச்சத்தை ஏற்படுத்தும் நடிப்பு என தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர். ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது முத்திரையை பதித்தவர். குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனியாக அவர் நடித்த விதம் இன்றளவும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இப்படி திரையில் தனி அடையாளத்தை உருவாக்கிய ரகுவரன், சினிமாவுக்குள் நுழைய முயன்ற ஆரம்ப காலத்தில் எதிர்கொண்ட அனுபவம் மிகவும் வித்தியாசமானது.

ரகுவரனின் உயரம்

திரைப்படக் கல்லூரியில் படிப்பை முடித்த பிறகு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளை ரகுவரன் தேடத் தொடங்கினார். அப்போது அவரது நடிப்புத் திறமையைவிட தோற்றம் மற்றும் உயரம் குறித்துதான் சிலரின் கவனம் சென்றதாக அவர் பழைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆறு அடிக்கும் மேல் உயரம் கொண்ட ரகுவரனை வழக்கமான கதாநாயகன் தோற்றத்தில் பொருத்திப் பார்க்க முடியாது என்ற எண்ணம் அப்போது சிலரிடம் இருந்திருக்கிறது.

ஹீயோயினை எங்கே தேடுவது?

தனது உயரத்தைப் பார்த்து, “நீ இவ்வளவு உயரமாக இருக்கிறாய். உனக்கு ஹீரோயினை எங்கிருந்து தேடுவது?” என்று சிலர் தன்னிடம் கேட்டதாக ரகுவரன் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, அவரது தோற்றத்தை வைத்து ‘ஜிப்ஸி’ என்றும் சிலர் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் வந்த ஒருவருக்கு இதுபோன்ற விமர்சனங்கள் நிச்சயம் எளிதானதாக இருந்திருக்காது.

தோற்றமே அடையாளமாக மாறியது

ஆனால், காலம் செல்ல செல்ல ரகுவரனின் தோற்றமே அவருக்கான மிகப்பெரிய பலமாக மாறியது. வழக்கமான ஹீரோ கதாபாத்திரங்களைத் தாண்டி, வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் அவர் காட்டிய நடிப்பு கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக பாட்ஷாவில் மார்க் ஆண்டனி கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. பின்னர் முதல்வன் உள்ளிட்ட படங்களிலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். அந்தப் படத்திற்காக சிறந்த வில்லனுக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் பெற்றார். ஒரு காலத்தில் வாய்ப்புக்கு தடையாக பார்க்கப்பட்ட உயரமும் தோற்றமும், பின்னர் அவருடைய அடையாளமாகவே மாறியது. அதனால்தான் ரகுவரனின் ஆரம்பகால சினிமா பயணம், இன்று திரும்பிப் பார்க்கும்போதும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Actor Suriya:
Actor Suriya: "விருந்தோம்பலில் அவங்கதான் பெஸ்டாம்.." தமிழ்நாட்டைக் குறைத்து ஆந்திராவைப் புகழ்ந்து பேசிய சூர்யா! விளாசும் தமிழர்கள்!
Karthik Subbaraj: டோரதி படம் பார்க்காமலேயே விமர்சனம் செய்வதா?.. டென்ஷனான கார்த்திக் சுப்பராஜ்!
Karthik Subbaraj: டோரதி படம் பார்க்காமலேயே விமர்சனம் செய்வதா?.. டென்ஷனான கார்த்திக் சுப்பராஜ்!
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Actor Jeevan: சொந்த குடும்பத்தினரே உதவல.. வருத்தப்பட்ட நடிகர் ஜீவன்.. சினிமாவில் காணாமல் போன காரணம் இதுதானா?
Actor Jeevan: சொந்த குடும்பத்தினரே உதவல.. வருத்தப்பட்ட நடிகர் ஜீவன்.. சினிமாவில் காணாமல் போன காரணம் இதுதானா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தாய் மாமன் சீர்.! ஒரு கிராம் தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன.? தேவைப்படும் ஆவணங்கள்.?-வழிமுறை இதோ..
தாய் மாமன் சீர்.! ஒரு கிராம் தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன.? தேவைப்படும் ஆவணங்கள்.? வழிமுறை இதோ..
ThaiMaaman Thanga Mothiram Thittam : ’தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி’ தங்க மோதிர திட்டத்தை மதுரையில் தொடங்கும் முதல்வர் விஜய்..!
’தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி’ தங்க மோதிர திட்டத்தை மதுரையில் தொடங்கும் முதல்வர் விஜய்..!
"தாய்மாமன் சீர்சுமந்து வாராண்டி.." தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று தொடக்கம்! மதுரையில் தொடங்கும் விஜய்!
Renault Triber: நாட்டின் மலிவான 7 சீட்டரில் டர்போ பெட்ரோல் ஆப்ஷனை இறக்கிய ரெனால்ட் - விலை, மைலேஜ் விவரங்கள்
நாட்டின் மலிவான 7 சீட்டரில் டர்போ பெட்ரோல் ஆப்ஷனை இறக்கிய ரெனால்ட் - விலை, மைலேஜ் விவரங்கள்
TN Investment: தமிழ்நாட்டை குறிவைக்கும் ஐரோப்பிய நாடுகள்..! எந்தெந்த மாவட்டங்களுக்கு ஜாக்பாட் - குவியும் முதலீடுகள்?
தமிழ்நாட்டை குறிவைக்கும் ஐரோப்பிய நாடுகள்..! எந்தெந்த மாவட்டங்களுக்கு ஜாக்பாட் - குவியும் முதலீடுகள்?
Gold and silver rate today : தங்கம் விலையில் மீண்டும் அதிரடி சரிவு.! சவரனுக்கு ரூ.1,880 குறைந்தது – நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
தங்கம் விலையில் மீண்டும் அதிரடி சரிவு.! சவரனுக்கு ரூ.1,880 குறைந்தது – நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
Bank Strike: கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
Upcoming New Cars:
Upcoming New Cars: "Benz முதல் Honda வரை.." அதிரப்போகுது அக்டோபர்.. அறிமுகமாகப் போகும் 10 கார்கள்!
Embed widget