மேலும் அறிய
Ayalaan 2 : உருவாகிறது அயலான் 2..வி.எஃப்.எக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் எத்தனை கோடி பட்ஜெட் தெரியுமா?
Ayalaan 2 : சமீபத்தில் வெளியான அயலான் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
அயலான் 2
1/7

இன்று நேற்று நாளை திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்த இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் அயலான்.
2/7

இந்த படத்தில் சிவகார்த்திகேயனோடு ரகுல் ப்ரீத் , கருணாகரன் , யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
3/7

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
4/7

கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளுக்காக வெகுவாக பாரட்டப்பட்டது.
5/7

இதனை தொடர்ந்து இப்படத்தில் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் பரவிய வண்ணம் இருந்தது.
6/7

அயலான் படத்திற்கு வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் அமைத்த ஃபாண்டன் எஃப்.எக்ஸ் நிறுவனம் அயலான் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு படக்குழுவுடன் போட்டுள்ள ஒப்பந்த அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.
7/7

இதனால் அயலான் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் படமாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Published at : 23 Jan 2024 04:51 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















