மேலும் அறிய

Demonte Colony 3: டிமான்டி காலனி 3 லைப்ரேரியன் வேடத்தில் இவரா? செம ட்ரீட் இருக்கு!

Demonte Colony 3 Update: டிமான்டி காலனி 3ம் பாகத்தில் வில்லன் வேடத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கிறார்.

Demonte Colony 3 Update: தமிழ் திரையுலகின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. த்ரில்லர், பேய் படங்களைத் தேர்வு செய்து நடிப்பதில் கைதேர்ந்தவராக உள்ளார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இவர் நடித்த த்ரில்லர் படமான டிமான்டி காலனி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

டிமான்டி காலனி 3ல் குரு சோமசுந்தரம்:

2015ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2024ம் ஆண்டு வெளியாகியது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே வெளியாகிய இந்த படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தை முடிக்கும்போது இதன் 3ம் பாகத்திற்கான அறிவிப்புடன் முடிந்திருக்கும்.

இந்த நிலையில், இந்த படத்தின் 3ம் பாகம் இந்தாண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. டிமான்டி காலனி 3ம் பாகத்தில் பிரபல நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கிறார். 

மிரட்டப்போகும் வில்லன்:

டிமான்டி காலனி படத்தின் 2ம் பாகம் முடியும்போது, ஒரு நூலகர் கதாபாத்திரத்துடன் படம் நிறைவடைந்திருக்கும். 3ம் பாகத்தின் வில்லன் கதாபாத்திரமான அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்? என்ற அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கிறார். 

3ம் பாகத்திற்கான படப்பிடிப்பு தளத்தில் குரு சோமசுந்தரம் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டதன் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில் ரத்தம் தெறிக்க 2ம் பாகத்தின் தொடர்ச்சிக்கான காட்சியில் குரு சோமசுந்தரம் நடிக்கிறார். 

படப்பிடிப்பு விறுவிறுப்பு:

இந்த 3ம் பாகத்தில் நடிகர் அருள்நிதியுடன் பிரியா பவானிசங்கர், நடிகை மீனாட்சி கோவிந்தராஜன், நடிகை அர்ச்சனா, நடிகர் முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.  இந்த படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் பி தயாரிக்கிறது. முதல் 2 பாகங்களைப் போலவே இந்த 3ம் பாகத்தையும் விறுவிறுப்பாக எடுத்து முடிக்க இயக்குனர் அஜய் ஞானமுத்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். கோடை விடுமுறையாக இந்த படம் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரண்ய காண்டம் படம் மூலமாக நடிகராக அறிமுகமான குரு சோமசுந்தரம் ஜிகர்தண்டா படத்தில் மிகவும் பிரபலமானார். ஜோக்கர் படத்தில் கதாநாயகனாக நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். மிகவும் யதார்த்தமான அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். மலையாளத்தில் மின்னல் முரளி படத்தில் வில்லனாக நடித்து மிகவும் பிரபலமானார்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget