மேலும் அறிய
Shiva Rajkumar : ‘இருக்கு பெரிய சம்பவம் இருக்கு..’ தனுஷ் படத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார்!
ஜெயிலர் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் சிவராஜ் குமார் ட்ரெண்டிங்கிள் உள்ளார்.
கேப்டன் மில்லரில் சிவராஜ் குமார்
1/6

தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட நடிகராக உள்ளவர் தனுஷ். இவர் தற்போது 'கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகின்றார்.
2/6

குறிப்பாக மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் அண்ணன் சிவராஜ்குமார் இந்த படத்தில் நடித்துள்ளார்.
3/6

சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் சிவராஜ் குமார் நடித்திருப்பார். அதில் அவர் வரும் காட்சிகளுக்கு பயங்கர ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
4/6

கேப்டன் மில்லர் படத்தில் அவர் நடித்துள்ள தகவல் சிலருக்கு தெரிந்தும் பலருக்கு தெரியாமலும் இருந்து வந்த நிலையில், ஜெயிலர் ரிலீஸிற்கு பின் இந்த தகவல் அனைவரையும் சென்றடைந்துள்ளது.
5/6

தமிழ் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் நடிகரான சிவராஜ் குமார் கேப்டன் மில்லரில் தனுஷின் அண்ணனாக நடித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
6/6

இந்த படத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் மிரட்டி இருப்பார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
Published at : 15 Aug 2023 01:59 PM (IST)
மேலும் படிக்க





















