"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" கிறிஸ்துமஸ் தாக்குதல்.. பிரதமர் மோடி உருக்கம்!
ஜெர்மனி, இலங்கையில் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் தாக்குதல் சம்பவங்களால் தனது மனது வேதனை அடைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது சந்தையில் கூடியிருந்த மக்கள் மீது காரை ஏற்றி தாக்குதல் நடத்தப்பட்டது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இம்மாதிரியான செயல்கள் தனது மனதில் வலியை ஏற்படுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு சார்பில் ஏற்பாடு செய்த கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டுள்ளார். அதில் பேசிய பிரதமர், "வன்முறையை பரப்பி சமூகத்தில் சீர்குலைவுகளை ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்கும்போது என் மனம் வேதனை அடைகிறது.
கிறிஸ்துமஸ் தாக்குதல்:
சில நாட்களுக்கு முன்பு, ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் என்ன நடந்தது என்று பார்த்தோம். 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையின் போது, இலங்கையில் தேவாலயங்கள் தாக்கப்பட்டன. குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த கொழும்பு சென்றேன். இந்தச் சவால்களுக்கு எதிராக ஒன்று கூடி போராடுவது முக்கியம்.
கர்த்தராகிய கிறிஸ்துவின் போதனைகள் அன்பையும், நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் கொண்டாடுகின்றன. மேலும், அவரின் ஆன்மாவை பலப்படுத்துவதற்கு அனைவரும் உழைக்க வேண்டியது அவசியம்.
உருக்கமாக பேசிய பிரதமர் மோடி:
10 ஆண்டுகளுக்கு முன்னர் போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் இருந்து தந்தை அலெக்சிஸ் பிரேம் குமாரை நாங்கள் பாதுகாப்பாக அழைத்து வந்தது எனக்கு மிகவும் திருப்திகரமான தருணம். எட்டு மாதங்கள் அங்கேயே சிக்கிக் கொண்டு பிணைக் கைதியாக இருந்தார். எங்களைப் பொறுத்தவரை, இந்த பணிகள் அனைத்தும் வெறும் தூதரகப் பணிகள் அல்ல. ஆனால், குடும்ப உறுப்பினர்களை மீட்டெடுப்பதற்கான உணர்ச்சிபூர்வமான அர்ப்பணிப்பு.
#WATCH | Delhi | Speaking at a Christmas celebration organised by the Catholic Bishops' Conference of India (CBCI), PM Modi said, "The Bible says - bear each other's burdens. Our institutions and organisations work with this motto. Jesus Christ showed the world the path of… pic.twitter.com/ItOCaHujVY
— ANI (@ANI) December 23, 2024
அவர்கள் எங்கிருந்தாலும், எந்த நெருக்கடியை எதிர்கொண்டாலும், இன்றைய இந்தியா தனது குடிமக்களை பாதுகாத்து கொண்டு வருவதை எனது கடமையாக பார்க்கிறேன். புனித ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கர்தினல் பதவிக்கு ஜார்ஜ் கூவக்காட்டை திருத்தந்தை பிரான்சிஸ் நியமனம் செய்திருப்பது பெருமைக்குரிய தருணம்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!