மேலும் அறிய
Kalidas Jayaram Wedding Photos: கண்ணே பட்டுடும் அவ்வளவு அழகு; ஜெயராம் மகன் காளிதாஸ் - தாரிணி திருமண புகைப்படங்கள்!
Kalidas Jayaram - Tarini Wedding Photos: நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தன்னுடைய நீண்ட நாள் காதலி தாரிணியை இன்று குருவாயூர் கோவிலில் கரம்பிடித்தார். இதுகுறித்த புகைப்படங்கள் இதோ.
காளிதாஸ் ஜெயராம் மற்றும் தாரிணி காலிங்கராயர் திருமண புகைப்படங்கள்
1/10

மலையாளம் மற்றும் தமிழில் இளம் ஹீரோவாக இருக்கும் காளிதாஸ் ஜெயராமுக்கும் அவருடைய நீண்ட நாள் காதலியான தாரிணி காளிங்கராயருக்கும் திருமணம் இன்று நடந்து முடிந்துள்ளது.
2/10

மலையாள நடிகரான, ஜெயராம் தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் அறிமுகமான கோகுலம் படம், நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
3/10

மோகன் லால், மாமூட்டி போன்ற நடிகர்கள் தமிழில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் போனாலும் ஜெயராம் கோலிவுட் ரசிகர்களால் ஒரு தமிழ் நடிகராகவே பார்க்கப்பட்டார்.
4/10

இவர் நடிப்பில் வெளியான புருஷ லட்சணம், ப்ரியங்கா, மனசு ரெண்டு புதுசு, முறை மாமன், பரிவட்டம், நைனா போன்ற பல படங்களை நல்ல வரவேற்பை பெற்றவை. தமிழில் சுமார் 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஜெயராம்.
5/10

இவர் மலையாள நடிகையான பார்வதியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு மாளவிகா என்கிற மகளும் , காளிதாஸ் என்கிற மகனும் உள்ளனர்.
6/10

இவரின் மகள் மாளவிகாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. இந்த ஆண்டு காளிதாஸ் ஜெயராமுக்கும் அவரின் காதலி தாரிணி காளிங்கராயருக்கும் திருமணம் இன்று குருவாயூரில் நடந்துள்ளது.
7/10

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தாலும் இந்த ஆண்டு தான் பெரியோர் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டனர்.
8/10

கடந்த வாரம் சென்னையில் இவர்களின் ப்ரீ வெட்டிங் ரிசப்ஷன் நடந்தது குறிப்பிடத்தக்கது. காளிதாஸ் ஜெயராம் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள தாரிணி ஜமீன் வாரிசு ஆவார்.
9/10

ஊத்துக்குளி காலிங்கராயன் ஜமீன் வம்சத்தை சேர்ந்தவர். இவர் பிறந்தது, வளர்த்தது எல்லாம் சென்னை என்றாலும், மாடலிங் துறையில் கால் பதித்து மிகவும் பிரபலமானார். அதே போல் காளிதாஸ், மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழில் ஹீரோவாக மாறியவர். அந்த வகையில் இவர் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் மீன்குழப்பும் மண் பானையும்.
10/10

தற்போது மலையாளம் தமிழ் என இரு மொழிகளிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் இவர் நடிகர் தனுஷுக்கு தம்பியாக ன் நடித்து வெளியான, ராயன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள காளிதாஸ் ஜெயராம் மற்றும் தாரிணி ஜோடியின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
Published at : 08 Dec 2024 08:11 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















