அமெரிக்காவில் தடுப்பூசி போட தொடரும் மாறுவேட மோசடிகள்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இளம் வயதினர் மாறுவேடம் போட்டு மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

உலக நாடுகளில் கொரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதித்த நாடு அமெரிக்கா. உயிரிழப்பில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் அமெரிக்க மக்களை பாதுகாக்க, அந்நாட்டு அரசு தற்போது தடுப்பூசி செலுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் முதியவர்களாக இருப்பதால் முதற்கட்டமாக 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் தடுப்பூசி போட தொடரும் மாறுவேட மோசடிகள்

இதை சற்றும் எதிர்பாராத இளம் வயதினர், தங்களின் டார்ன் வருவதற்குள் நோய் தொற்று வந்துவிடுமோ என்ற அச்சத்தில், முதியவர்கள் போல வேடமிட்டு, தடுப்பூசி போட மோசடி வேலைகளில் இறங்கிவிட்டனர். குறிப்பாக இளம்பெண்கள், முதாட்டிகளை போல வேடமிட்டு தடுப்பூசி போட வருவதும், அவர்களை கண்டுபிடித்து அதிகாரிகள் எச்சரித்து அனுப்புவதும் தற்போது அமெரிக்காவில் வாடிக்கையாக நடந்து வருகிறது.  அமெரிக்காவில் தடுப்பூசி போட தொடரும் மாறுவேட மோசடிகள்

சமீபத்தில் புளோரிடா மாகாணத்தில் நடந்த தடுப்பூசி முகாமிற்கு வந்த இரு மூதாட்டிகள் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அவர்களை பரிசோதித்த போது, அவர்கள் இருவரும் 34 வயது கொண்டவர்கள் என்பது தெரியவந்தது. மூதாட்டிகளை போல அலங்கரித்து அதற்காக பெரிய தொகையை செலவு செய்து தடுப்பூசி போட அவர்கள் வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த இருவரையும் சுகாதாரத்துறையினர் எச்சரித்து அனுப்பினர். கொரோனா அச்சத்தில் அமெரிக்காவில் அரங்கேறிவரும் இந்த ஆள் மாறாட்ட மோசடியை எப்படி கட்டுப்படுத்துவது என அமெரிக்க அதிகாரிகள் சிந்தித்து வருகின்றனர். 

Tags: Vaccine covid 19 covid 2021 usa america vaccine us covid usa covid ovid vaccine

தொடர்புடைய செய்திகள்

George Floyd | கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாயிட் கொலையை வீடியோ பதிவுசெய்த பெண்ணுக்கு புலிட்சர் பரிசு !

George Floyd | கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாயிட் கொலையை வீடியோ பதிவுசெய்த பெண்ணுக்கு புலிட்சர் பரிசு !

உரிமையாளர் சென்ற ஆம்புலன்ஸை பின் தொடர்ந்த பாசக்கார நாய்- வைரலாகும் வீடியோ !

உரிமையாளர் சென்ற ஆம்புலன்ஸை பின் தொடர்ந்த பாசக்கார நாய்- வைரலாகும் வீடியோ !

G7 Summit: ஜி 7 உச்சி மாநாடு தொடக்கம்: ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி தானம்!

G7 Summit: ஜி 7 உச்சி மாநாடு தொடக்கம்: ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி தானம்!

கோவாக்சினுக்கு அங்கீகாரம் தர அமெரிக்கா மறுப்பு; மனுவை தள்ளுபடி செய்தது!

கோவாக்சினுக்கு அங்கீகாரம் தர அமெரிக்கா மறுப்பு; மனுவை தள்ளுபடி செய்தது!

உடல்நலம் குன்றிய எஜமானர் : மருத்துவமனை வாசலிலேயே தவமிருந்த செல்ல நாய்.. துருக்கியில் நெகிழ்ச்சி!

உடல்நலம் குன்றிய எஜமானர் : மருத்துவமனை வாசலிலேயே தவமிருந்த செல்ல நாய்.. துருக்கியில் நெகிழ்ச்சி!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Rajinikanth Health Update: 14 சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!

Rajinikanth Health Update: 14  சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!

PUBG Madan | பப்ஜி மதனின் யூடியூப், இன்ஸ்டா பக்கங்களை முடக்க கடிதம்

PUBG Madan | பப்ஜி மதனின் யூடியூப், இன்ஸ்டா பக்கங்களை முடக்க கடிதம்