Russia Ukraine war: ரஷ்ய ராக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்ட நடிகை ஒக்ஸானா ஷ்வெட்ஸ் யார் தெரியுமா?
ரஷ்ய ராக்கெட் தாக்குதலில் உக்ரைன் நடிகை ஒக்ஸானா ஷ்வெட்ஸ் (Oksana Shvets) கொல்லப்பட்டார்.
ரஷ்ய ராக்கெட் தாக்குதலில் உக்ரைன் நடிகை ஒக்ஸானா ஷ்வெட்ஸ் (Oksana Shvets) கொல்லப்பட்டார். உக்ரைனில் உள்ள கிவ் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில் அந்நாட்டு நடிகை ஒக்ஸானா ஷ்வெட்ஸ் உயிரிழந்துள்ளார். கிவ் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் திறமையான திரைக்கலைஞர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான, 'Honored Artist of Ukraine' என்ற விருது நடிகை ஒக்ஸானாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய போர், கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடந்து வரும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தாக்குதலில் , கிட்டத்தட்ட 600 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஒக்ஸானா ஷ்வெட்ஸ் இவான் ஃபிராங்கோ தியேட்டர் மற்றும் கியேவ் ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் தியேட்டர் ஆர்ட்ஸில் உள்ள தியேட்டர் ஸ்டுடியோவில் பட்டம் பயின்றவர்.
புகழ்பெற்ற யங் தியேட்டரில் அவரது பணியைத் தவிர, டெர்னோபில் மியூசிக் அண்ட் டிராமா தியேட்டர் மற்றும் கியேவ் தியேட்டர் ஆஃப் நையாண்டி ஆகியவற்றிலும் அவர் தனது நாடகங்களை நிகழ்த்தினார்.
டுமாரோ வில் பி டுமாரோ, தி சீக்ரெட் ஆஃப் செயின்ட் பேட்ரிக் போன்ற படங்களில் நடித்ததற்காகவும், ஹவுஸ் வித் லில்லிஸ், தி ரிட்டர்ன் ஆஃப் முக்தார் மற்றும் பிற தொடர்களில் ஷ்வெட்ஸ் தனது திறமையான நடிப்பின் மூலம் மக்களின் கவனம் ஈர்த்தவர்.
நாடகத்துறையில் ஷ்வெட்ஸ் செய்த பணிக்காக உக்ரைனின் மெரிட்டட் ஆர்ட்டிஸ்ட் விருதும் (Merited Artist of Ukraine Award) அவருக்கு வழங்கப்பட்டது. உக்ரேனிய அரசாங்கம் நாடக கலைஞர்களின் திறன்மிக்க பணியை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதினை வழங்குகிறது. இது அரசால் வழங்கப்படும் உயரிய சிவிலியன் கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
The actress of the Young Theatre Oksana Shvets has been murdered in Kyiv during the war. pic.twitter.com/Rp3DcgSbge
— KyivPost (@KyivPost) March 17, 2022
மேலும் படிக்க..
Ponmudi Speech: ஆசிரியர் நியமனம் குறித்த கேள்வி! கடுப்பான அமைச்சர் பொன்முடி!
Watch Video: சத்தமிட்டு அதிர வைத்த மாணவர்கள்.. பச்சை குத்திய ரசிகர்: சன்னி லியோன் செய்த காரியம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்