Electric Bus : தமிழக அரசு சார்பில் 2 ஆயிரம் மின்சார பேருந்துகள்: எங்கிருந்து எப்படி? - சுப்ரியாசாஹூ தகவல்
தமிழக அரசு சார்பில் 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரியாசாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் பருவநிலை மாறுபாடு துறையில் கூடுதல் முதன்மை செயலாளராக பொறுப்பு வகிப்பவர் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரியாசாஹூ. தமிழக அரசு சார்பில் 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “ பசுமை இயக்கம் மற்றும் காலநிலை நடவடிக்கைக்கு ஒரு பெரிய உந்துதலில், ஜெர்மன் மேம்பாட்டு வங்கியான கே.எப்.டபுள்யூ-ன் ஆதரவுடன் தமிழக அரசு சுமார் 2 ஆயிரம் மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
In a huge push to green mobility and Climate action,Tamil Nadu Government will induct about 2,000 electric buses with support from KfW-the German development bank #greenmobility #climateaction #TNBudget pic.twitter.com/i39ffzgp8c
— Supriya Sahu IAS (@supriyasahuias) March 18, 2022
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டும், பெட்ரோல் – டீசல் செயல்பாட்டை குறைக்கும் நோக்கத்தில் பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் செயல்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையிலான வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலும் கடந்த ஆட்சியில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டது. தற்போது, தமிழ்நாட்டில் மின்சார பேருந்துகளின் செயல்பாட்டை அதிகரிப்பதற்காக 2 ஆயிரம் மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க : TN Budget 2022 LIVE: பேராசிரியர் அன்பழகன் பெயரில் கல்வித் திட்டம்... சென்னை வெள்ளத்திற்கு ரூ.500 கோடி... பட்ஜெட் அறிவிப்புகள் இதோ
மேலும் படிக்க : TN Budget 2022: மாதம் ரூ. 1000 எங்கே? - குடும்பத்தலைவிகளை ஏமாற்றிய தமிழக பட்ஜெட்...!
மேலும் படிக்க : TN Budget 2022: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் தனி நிதியம்: தமிழக அரசு அறிவிப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்