பற்கள் மஞ்சள் நிறமாக இருப்பதால் சிரமப்படுகிறீர்களா?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pexels

பற்களை சுத்தமாக வைத்திருப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். அதுபோல அழகிற்கும் முக்கியமானது.

Image Source: pexels

பலருக்கு தினமும் பல் துலக்கியும் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த பிரச்னைக்கான தீர்வு வீட்டிலேயே உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?!

Image Source: pexels

ஒரு நாளைக்கு 2 முறை பல் துலக்குங்கள். காலையில் எழுந்தவுடன், இரவில் தூங்குவதற்கு முன் பல் துலக்குங்கள்.

Image Source: pexels

பற்களை வெண்மையாக வைத்திருக்க ஜெல் போன்ற பேஸ்ட்டை பயன்படுத்துவது நல்லது அல்ல. சற்று சொரசொரப்பான பேஸ்ட்டை தேர்ந்தெடுக்கவும்.

Image Source: pexels

மஞ்சள் பற்களை சுத்தம் செய்ய சிறிதளவு பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் தயாரிக்கலாம்.

Image Source: pexels

இந்த பேஸ்ட்டை பிரஷ்ஷில் வைத்து தினமும் மெதுவாக பல் துலக்கினால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் பெரும்பாலும் நீங்கும்.

Image Source: pexels

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்க ஸ்ட்ராபெர்ரி மற்றும் உப்பு சேர்த்து பேஸ்ட் செய்து பற்களில் தேய்க்கலாம்.

Image Source: pexels

பற்களை சுத்தம் செய்ய தேங்காய் எண்ணெயும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது பற்களில் உள்ள கறைகளை நீக்குகிறது.

Image Source: pexels

தேங்காய் எண்ணெயை விரலால் எடுத்து மெதுவாக 10-15 நிமிடங்கள் வரை பற்களில் தேய்த்து சுத்தம் செய்யவும். பிறகு வாயை சுத்தம் செய்வது நல்லது.

Image Source: pexels