மேலும் அறிய

Sri Lanka Presidential Election LIVE: இலங்கை அதிபர் தேர்வில் ரணில் வெற்றி

பொதுவாக இலங்கையில் மக்களால் மட்டுமே அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். தற்போது இலங்கையிலுள்ள சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாலே அதிபர் தேர்வு செய்யப்படவுள்ளார்.

LIVE

Key Events
Sri Lanka Presidential Election LIVE:  இலங்கை அதிபர் தேர்வில் ரணில் வெற்றி

Background

பரபரப்பான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது உலக நாடுகளை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உலக நாடுகளையே ஆட்டம் காண செய்துள்ளது. அங்கு பெட்ரோல், டீசல், உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதோடு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியால் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ததோடு மட்டுமல்லாமல் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவும் பதவியேற்றார். 

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது போல அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.  நிலைமை இப்படியிருக்க கடந்த வாரம் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றினர். ஆனால் தகவலறிந்து கோத்தபய ராஜபக்ச அங்கிருந்து தப்பியோடி நாட்டை விட்டு வெளியேறினார். முதலில் மாலத்தீவுக்கு சென்ற அவருக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது கோத்தபய சிங்கப்பூரில் தஞ்சம் புகுந்துள்ளார். 

 ரணில் தற்போது இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இதனிடையே அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச தனது ராஜினாமா கடிதத்தை தூதரகம் வாயிலாக இலங்கை சபாநாயகருக்கு அனுப்பி இருந்தார். புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக இலங்கை நாடாளுமன்றம் ஜூலை 20 ஆம் தேதி கூடும் என்றும், அன்றைய தினம் தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் இலங்கையில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. 

பொதுவாக இலங்கையில் மக்களால் மட்டுமே அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். தற்போது இலங்கையிலுள்ள சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாலே அதிபர் தேர்வு செய்யப்படவுள்ளார். இதனிடையே  வேட்புமனு தாக்குதல் நேற்று நடைபெறவிருந்த நிலையில் அதிபர் தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாச விலகுவதாக  அறிவித்தார். அதேபோல் இலங்கையின் புதிய அதிபராக டலஸ் அழகப்பெரும தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் அதிபர் பதவிக்கான போட்டிக்களத்தில் அனுரகுமார திசாநாயக்க, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

12:42 PM (IST)  •  20 Jul 2022

இலங்கை அதிபராகிறார் ரணில் விக்கிரமசிங்க

இலங்கை அதிபராகிறார் ரணில் விக்கிரமசிங்க.

12:38 PM (IST)  •  20 Jul 2022

130 வாக்குகளுக்கு மேல் பெற்ற ரணில் விக்கிரமசிங்க

130 வாக்குகளுக்கு மேல் ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

12:37 PM (IST)  •  20 Jul 2022

வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்த ரணில்

இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ரணில் அதிக வாக்குகளை பெற்றுள்ளார். இன்னும் சில நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவுப்பு வெளியாக உள்ளது.

12:35 PM (IST)  •  20 Jul 2022

இன்னும் சில நேரத்தில் முடிவுகள் அறிவிப்பு

இன்னும் சில நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

12:31 PM (IST)  •  20 Jul 2022

வாக்கு எண்ணும் பணி நிறைவு

வாக்கு எண்ணும் பணி நிறைவு பெற்றுள்ளது.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget