Suzhal 2 Review : முதல் சீசனை மிஞ்சியதா சுழல் 2...ரசிகர்கள் விமர்சனங்கள் இதோ
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கதிர் , ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சுழல் வெப் சீரிஸ் இன்று அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது

சுழல்
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான த்ரில்லர் வெப் சீரிஸ் சுழல். முதல் சீசன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால், சரவணன், மஞ்சிமா மோகன், ‘கயல்’ சந்திரன், கௌரி ஜி கிஷன், சம்யுக்தா வயோலா விஸ்வநாதன், மோனிஷா பிளெஸ்ஸி, ரினி, ஸ்ரீஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், கலைவாணி பாஸ்கர், அஷ்வினி நம்பியார், சாந்தினி தமிழரசன் மற்றும் பலர் இதில் நடித்துள்ளார்கள். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். முந்தைய சீசன் பெரியளவில் பாராட்டுக்களைப் பெற்ற நிலையில் இரண்டாவது ரசிகர்களை திருபதி படுத்தியதா இல்லையா என்பதைப் பார்க்கலாம்
சுழல் 2 விமர்சனம்
சூழல் 2 பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தங்கள் விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள். சிறு வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இரு பெண்களை மையப்படுத்தி கதை முந்தைய பாகத்தில் சொல்லப்பட்டது. தற்போது இரண்டாவது சீசன் இதேபோன்ற பல பெண்களின் கதையை பேசுகிறது. கதிர் மற்றும் லால் முக்கிய கதாபாத்திரங்களாக இடம்பெற்றுள்ளார்கள். அடுத்தடுத்து புதிகளை கட்டமைத்து சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டிருந்தாலும் இறுதியில் புதிர்களை அவிழ்க்கும் போது சுவார்ஸ்யம் குறைந்துவிடுவதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.
#SuzhalS2 has been watched
— Avinash Ramachandran (@Avinash_R13) February 28, 2025
I was impressed with the way the pieces of the puzzle were spread, and the core case.
But, after a point, the pieces are forced together, and the plot goes around in circles...
And it was an underwhelming and tepid end to a rather promising start. pic.twitter.com/ncnKSr5uqq
முந்தைய பாகத்தின் அளவிற்கு இல்லை என்றாலும் சூழல் கையாண்டிருக்கும் கதை பேசப்பட வேண்டிய ஒன்று என மற்றொருவர் தளம் கூறியுள்ளது. முதல் எபிசோட் முதல் சீட் நுணியில் அமர வைக்கும் வகையில் இந்த தொடர் சுவாரஸ்யமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்
#Suzhal Season 2 💥💥💥
— Seriesfied (@seriesfied) February 22, 2025
Reports suggest that it will be better than the first season, especially unlike S1, the initial few episodes will be racy. There's a lot if whitsle- worthy moments in the show as well!
Gear up folks! pic.twitter.com/VkwGDx7AVZ





















