மேலும் அறிய

"கொஞ்சமாச்சு ஆம்பளைங்கள நினைச்சி பாருங்க" உயிரை விட்ட கணவர்.. மனைவி மீது புகார்!

மனைவி கொடுமைப்படுத்துவதாகக் கூறி ஆண்கள் தற்கொலை செய்வது தொடர் கதையாகி வரும் நிலையில், தனது மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாகக் கூறி உத்தர பிரதேச இளைஞர் ஒருவர் உயிரை விட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் ஐடி துறையில் வேலை செய்யும் நபர் ஒருவர், தனது மனைவி மன உளைச்சல் அளித்ததாகக் கூறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக, மனைவி கொடுமைப்படுத்துவதாகக் கூறி ஆண்கள் தற்கொலை செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த சூழலில், தனது மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாகக் கூறி இளைஞர் ஒருவர் உயிரை விட்டுள்ளார்.

உயிரை விட்ட கணவர்:

கடந்த சில மாதங்களாகவே, மனைவி மீது புகார் கூறிவிட்டு கணவன்மார்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. கடந்தாண்டு, பெங்களூருவை சேர்ந்த ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை செய்து கொண்டது தேசிய அளவில் பேசுபொருளானது.

பணத்தை கேட்டு தனது மனைவி தன்னை கொடுமைப்படுத்தியதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுவிட்டு, அதுல் தற்கொலை செய்தார். இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 34 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். மனைவியும் அவரது குடும்பத்தினரும் டார்ச்சர் செய்ததாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. டி.சி.எஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மானவ் சர்மா, தனது மனைவி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு உயிரை விட்டுள்ளார். அதற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கழுத்தில் கயிறை மாட்டி கொண்டு 7 நிமிடங்களுக்கு தனது மனைவி மீது புகார் கூறியுள்ளார்.

"ஆண்கள் இல்லாத ஒரு காலம் வரும்"

"இது அதிகாரிகளுக்கானது. சட்டம் ஆண்களைப் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் குற்றம் சொல்ல ஆண்கள் இல்லாத ஒரு காலம் வரும். என் மனைவி வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்தார். ஆனால், நான் என்ன செய்ய முடியும்? இனி அது ஒரு பொருட்டல்ல.

எனக்கு இறப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. நான் செல்ல விரும்புகிறேன். தயவுசெய்து ஆண்களைப் பற்றி சிந்தியுங்கள். மன்னிக்கவும், எல்லோரும். தயவுசெய்து, யாராவது ஆண்களைப் பற்றிப் பேச வேண்டும். அவர்கள் மிகவும் தனிமையாக்கப்படுகிறார்கள். நான் போனவுடன் எல்லாம் சரியாகிவிடும். நான் இதற்கு முன்பும் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறேன்" என மானவ் சர்மா பேசியுள்ளார்.

இவரின் குற்றச்சாட்டுகளுக்கு அவரின் மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். "அவர் தற்கொலை செய்து கொண்ட நாளில், அவர் என்னை என் தாய் வீட்டில் இறக்கிவிட்டார். அவர் என்னைப் பற்றி என்ன சொன்னாலும், அது என் கடந்த காலத்தைப் பற்றியது. எங்கள் திருமணத்திற்குப் பிறகு அப்படி நடக்கவில்லை. அவர் இதற்கு முன்பு பல முறை தன்னைத்தானே காயப்படுத்த முயன்றார். நான் அவரை குறைந்தது மூன்று முறையாவது தடுத்திருக்கிறேன். அவர் குடித்துவிட்டு என்னை அடிப்பார்" என மானவ் சர்மாவின் மனைவி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

’’18 வருஷமா இருக்கேன்; எனக்கே தெரியல- ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பென்ஷனை உடனே ரத்து செய்ங்க’’- உச்ச நீதிமன்றம் காட்டம்!
’’18 வருஷமா இருக்கேன்; எனக்கே தெரியல- ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பென்ஷனை உடனே ரத்து செய்ங்க’’- உச்ச நீதிமன்றம் காட்டம்!
Modi Spoke to Trump: “நீங்க மத்தியஸ்தம் பண்ணல; நான் அமெரிக்காவுக்கு வர முடியாது“ - ட்ரம்ப்பிடம் அதிரடி காட்டிய மோடி
“நீங்க மத்தியஸ்தம் பண்ணல; நான் அமெரிக்காவுக்கு வர முடியாது“ - ட்ரம்ப்பிடம் அதிரடி காட்டிய மோடி
சொன்ன சொல் தவறாத சிவகார்த்திகேயன்; 7 ஆண்டாக செய்யும் உதவி- உருகிய பிரபலம்!
சொன்ன சொல் தவறாத சிவகார்த்திகேயன்; 7 ஆண்டாக செய்யும் உதவி- உருகிய பிரபலம்!
Glenn maxwell: அசுரத்தனமான பேட்டிங்.. 13 சிக்ஸர்கள்!  மேக்ஸ்வெல் ருத்ரதாண்டவ சதம்
Glenn maxwell: அசுரத்தனமான பேட்டிங்.. 13 சிக்ஸர்கள்! மேக்ஸ்வெல் ருத்ரதாண்டவ சதம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vaniyambadi Crime |  உரிமையாளரை கட்டிப்போட்டு திருட்டு!பரபரப்பு  CCTV காட்சிகள்Isreal vs Iran | இஸ்ரேல் மீது ஈரான் அட்டாக்! கொதித்தெழுந்த அமெரிக்கா! காரணம் என்ன? | America‘Poovai’ Jagan Moorthy | ”கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்” குவியும் புகார்கள்! பூவை ஜெகன் மூர்த்தி கைது?Udhayanidhi Stalin : ’’அவர் கேட்டால் கொடுப்போம்’’ உதயநிதிக்கு PROMOTION போட்டுடைத்த ஆர்.எஸ்.பாரதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’18 வருஷமா இருக்கேன்; எனக்கே தெரியல- ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பென்ஷனை உடனே ரத்து செய்ங்க’’- உச்ச நீதிமன்றம் காட்டம்!
’’18 வருஷமா இருக்கேன்; எனக்கே தெரியல- ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பென்ஷனை உடனே ரத்து செய்ங்க’’- உச்ச நீதிமன்றம் காட்டம்!
Modi Spoke to Trump: “நீங்க மத்தியஸ்தம் பண்ணல; நான் அமெரிக்காவுக்கு வர முடியாது“ - ட்ரம்ப்பிடம் அதிரடி காட்டிய மோடி
“நீங்க மத்தியஸ்தம் பண்ணல; நான் அமெரிக்காவுக்கு வர முடியாது“ - ட்ரம்ப்பிடம் அதிரடி காட்டிய மோடி
சொன்ன சொல் தவறாத சிவகார்த்திகேயன்; 7 ஆண்டாக செய்யும் உதவி- உருகிய பிரபலம்!
சொன்ன சொல் தவறாத சிவகார்த்திகேயன்; 7 ஆண்டாக செய்யும் உதவி- உருகிய பிரபலம்!
Glenn maxwell: அசுரத்தனமான பேட்டிங்.. 13 சிக்ஸர்கள்!  மேக்ஸ்வெல் ருத்ரதாண்டவ சதம்
Glenn maxwell: அசுரத்தனமான பேட்டிங்.. 13 சிக்ஸர்கள்! மேக்ஸ்வெல் ருத்ரதாண்டவ சதம்
Top 10 News Headlines: கட்டணமில்லா குடிநீர் இயந்திரம் திறப்பு, மத்தியஸ்தம் குறித்து மோடி திட்டவட்டம், ஈரானுக்கு ட்ரம்ப் மிரட்டல் - டாப் 10 செய்திகள்
கட்டணமில்லா குடிநீர் இயந்திரம் திறப்பு, மத்தியஸ்தம் குறித்து மோடி திட்டவட்டம், ஈரானுக்கு ட்ரம்ப் மிரட்டல் - டாப் 10 செய்திகள்
ரூ.1.25 லட்சம் சம்பளம்... மெர்கண்டைல் வங்கியில் வேலை வாய்ப்பு: கடைசி தேதி 22ம் தேதிங்க!!!
ரூ.1.25 லட்சம் சம்பளம்... மெர்கண்டைல் வங்கியில் வேலை வாய்ப்பு: கடைசி தேதி 22ம் தேதிங்க!!!
Water ATM: சென்னையில் குடிநீர் ATM..! கவலையை விடுங்கள் ! துவங்கி வைக்கும் முதல்வர்! எங்கே, எப்படி?
Water ATM: சென்னையில் குடிநீர் ATM..! கவலையை விடுங்கள் ! துவங்கி வைக்கும் முதல்வர்! எங்கே, எப்படி?
Gold Rate 18th June: இப்படி ஏமாத்திட்டியே.?! குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம் - இன்றைய விலை என்ன தெரியுமா.?
இப்படி ஏமாத்திட்டியே.?! குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம் - இன்றைய விலை என்ன தெரியுமா.?
Embed widget