(Source: ECI/ABP News/ABP Majha)
Srilanka Crisis LIVE Updates:கோட்டபய ராஜபக்ச, அதிபர் பதவியை ராஜினாமா...
Sri Lanka Crisis LIVE: இலங்கையில் நீடித்து வரும் பதற்றமான சூழல் மற்றும் போராட்ட நிலவரங்களை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ்ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்து அந்த நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக கோரி இலங்கை முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை முழுவதையும் சுற்றிவளைத்தனர். போராட்டக்காரர்களை பார்த்து பயந்துபோன இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு தப்பியோடினார்.
இந்தநிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஜூலை 13ஆம் தேதி பதவி விலகுவது உறுதியாகிவிட்டது. இதுகுறித்து இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிக்கையில், இலங்கை அதிபர்கோத்தபய ராஜபக்சே ஷ ஜூலை 13ஆம் தேதி பதவி விலகுவதாக தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்து விலகுமாறு சபாநாயகர் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தான் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும், அனைத்துக் கட்சி ஆட்சியைப் பொறுப்பேற்க வழிவகை செய்வதாகவும் தெரிவித்தார்.
மார்ச் மாதத்திலிருந்து ராஜினாமா அழைப்புகளை எதிர்கொண்டிருந்த ராஜபக்சே, ஏப்ரல் தொடக்கத்தில் அவரது அலுவலக நுழைவாயிலை போராட்டகாரர்கள் நொறுக்கியதால், அதிபர் மாளிகையை தனது இல்லமாகவும் அலுவலகமாகவும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பயன்படுத்தி வந்தார்.
22 மில்லியன் மக்களைக் கொண்ட நாடான இலங்கை, முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரக் கொந்தளிப்பின் பிடியில் சிக்கி உள்ளது. கடந்த 70 ஆண்டுகள் இல்லாத மோசமான, அந்நியச் செலாவணியின் கடுமையான பற்றாக்குறையால் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியமான எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடியாமல் திணறுகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உலக நாடுகளையே ஆட்டம் காண செய்துள்ளது. அங்கு பெட்ரோல், டீசல், உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதோடு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
கோட்டபய ராஜபக்ச, அதிபர் பதவியை ராஜினாமா
கோட்டபய ராஜபக்ச, தனது அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சபாநாயகருகு கடிதம் அனுப்பியுள்ளார்
கோட்டபயவுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை- சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்
சிங்கப்பூர் வந்துள்ள கோட்டபய ராஜபக்ச அடைக்கலமும் கேட்கவில்லை; நாங்கள் அடைக்கலமும் கொடுக்கவில்லை என சிங்கப்பூர் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
Singapore foreign ministry on Sri Lanka's Rajapaksa-He entered on private visit, he has not asked for asylum and neither has he been granted asylum, reports Reuters.
— ANI (@ANI) July 14, 2022
சிங்கப்பூரில் கோட்டபய ராஜபக்ச...
அதிபர் பதவி விலக கோரி மக்கள் போராட்டத்தால், இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு தப்பி சென்ற கோட்டபய ராஜபக்ச, சிங்கப்பூருக்கு சென்றடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கலவரத்தை கட்டுப்படுத்த, இலங்கை ராணுவத்துக்கு அதிகாரம்...
இலங்கையில் கலவரத்தை கட்டுப்படுத்த, இலங்கை ராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sri Lanka soldiers authorised to use necessary force to prevent the destruction of property and life, reports Reuters quoting Army statement.
— ANI (@ANI) July 14, 2022
Srilanka Crisis LIVE Updates: கவச வாகனத்தில் இலங்கை ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பு
இலங்கையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கவச வாகனத்தில் இலங்கை ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.