மேலும் அறிய
Advertisement
Srilanka Crisis : மிகப்பெரும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை எதிர்நோக்கும் இலங்கை மக்கள்.. என்ன நடக்கிறது?
இலங்கையில் உணவு பாதுகாப்பு என்பது தற்போது அத்தியாவசிய தேவையாக மாறி உள்ளது என தகவல் வெளியாகியிருக்கிறது.
இலங்கையில் உணவு பாதுகாப்பு என்பது தற்போது அத்தியாவசிய தேவையாக மாறி உள்ளது என தகவல் வெளியாகியிருக்கிறது. நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதி செய்யாவிட்டால் அடுத்த வருடத்தில் இலங்கை மக்கள் மிகப் பெரும் ஊட்டச்சத்து குறைபாடுக்கு முகம் கொடுக்க நேரிடும் என உணவு பாதுகாப்பு குறித்த அதிபரின் குழு அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது பாதியளவு குடும்பங்கள் ஒருவேளை உணவை மட்டுமே எடுத்துக் கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.தற்போது இலங்கையில் விவசாய நடவடிக்கைகளை தொடரவும், வீழ்ச்சியை சரி செய்யவும் 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என உணவு பாதுகாப்பு தொடர்பான குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உணவுப் பொருட்களின் அதிக விலை ஏற்றமும் ,பொருட்களை வாங்க முடியாத காரணத்தால் மக்கள் ஊட்டச்சத்து குறைபாடுக்கு உள்ளாகி இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.உள்ளூர் சந்தையில் பால், முட்டை மற்றும் கோழி உற்பத்தியில் மிகப்பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு இருப்பதாக உணவு பாதுகாப்பு குறித்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கறி கோழி 12.1 சதவீதமும், பால் உற்பத்தி 19.8 சதவீதமும், முட்டை உற்பத்தி 34.9 சதவீதமும் குறைந்துள்ளதாக உணவு தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு குழு சுட்டி காட்டியுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மக்களின் அத்தியாவசிய தேவைகள் முற்றுமுழுதாக பாதிப்படைந்து இருக்கிறது. உள்ளூர் உற்பத்தி என்பது மிகவும் வீழ்ச்சி அடைந்த நிலையிலேயே காணப்படுகிறது.
முட்டை,கோழி இறைச்சி,பாலுக்கு இலங்கையில் மிகவும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
இதனால் மக்கள் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருக்கின்றனர். மேலும் இந்த வர்த்தகத்தினை மேற்கொள்ளும் வியாபாரிகளுக்கு போதிய வசதி இல்லாததால் இந்த உற்பத்தியும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு கோழி மற்றும் முட்டை உற்பத்தி துறைகள் முற்றாக காணாமல் போய்விடும் என ஆய்வு செய்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அதேபோல் கால்நடை தொழில் ஆடு, மாடு, கோழி போன்றவற்றின் பண்ணை வளர்ப்பும் முற்றும் முழுதாக வீழ்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. கால்நடைகளுக்கான உணவு கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. வற்றின் வளர்ச்சிக்கு தேவையான மக்காச்சோளம் ,உணவுகள் மற்றும் பிற எரிபொருட்கள் தட்டுப்பாடு காரணமாக பண்ணை வளர்ப்பும் குறைவடைய தொடங்கி இருக்கிறது. மக்களுக்கே அத்தியாவசிய தேவைகள் இல்லாத போது, உணவு பிற தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வழியில்லாத போது உற்பத்திகளை எவ்வாறு மேற்கொள்வார்கள்.அதிலும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் அவர்களுக்கு எவ்வாறு கிடைக்கும்? ஆகவே இலங்கை அரசு தொடர்ந்து இவ்வாறான விடயங்களில் கவனக்குறைவாக இருப்பதை உலக நாடுகள் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கின்றன. இன்னும் இலங்கையில் புதிய அரசு அரசியலமைப்புக்குள்ளேயே மூழ்கிக் கிடப்பதை காண முடிகிறது. மக்கள் அங்கு உணவுக்கு தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion