மேலும் அறிய

Crying Disease: என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?

ஒரு நாட்டில், புதிய விநோதமான அழுகை நோய் பரவி வருவதால், அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அது குறித்து தீவிர ஆராய்ச்சி நடந்து வருகிறது.

காங்கோ நாட்டின் ஒரு பகுதியில் பரவிவரும் இனம்தெரியாத நோய் ஒன்று, இதுவரை 50-க்கும் மேற்பட்டோரை பலிவாங்கியுள்ளது. ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய நோய் குறித்த ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இந்த நோய்க்கு, அழுகையும் ஒரு அறிகுறியாக இருப்பதாக கூறப்படுகிறது.

உயிர்பலி வாங்கும் விநோத நோய்

காங்கோ நாட்டின் வடமேற்கில் உள்ள ஈக்வேடியூர் மாகாணத்தில், இனம்தெரியாத புதிய நோய் ஒன்று பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 419 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம், காங்கோவிலிருந்து சுமார் 120 மைல் தூரத்தில் அமைந்துள்ள இரண்டு கிராமங்களில் நோய் பரவல் தொடங்கியதாக கூறப்படுகிறது. அழுகை வருவது இந்த நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக இருப்பதாக கூறுகிறார்கள்.

போலோகோ, போமேட் என்ற அந்த இரண்டு கிராமங்களில், முதலில், போலோகோவில், வௌவால் சாப்பிட்ட 3 குழந்தைகள் 48 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். அதே சமயம், போமேட் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு மலேரியா இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரண்டு கிராமங்களில் ஏற்பட்ட நோய்களுக்கான தொடர்பு ஏதும் இருப்பதாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என WHO எனப்படும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அந்த இரண்டு கிராமங்களிலும், இந்த புதிய விநோத நோய்க்கான காரணம் குறித்து அதிகாரிகள் அய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நோய் எதன் மூலம் பரவுகிறது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன.?

இந்த நோய் தாக்கியவர்களில் பெரும்பாலானோருக்கு, குளிர் காய்ச்சல், உடம்பு வலி, பேதி போன்றவை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இன்னும் சிலருக்கு, மூட்டுகள் மற்றும் கழுத்துப் பகுதியில் வலி ஏற்படுவதாகவும், வியர்வை மற்றும் மூச்சுத்திணறலும் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களில், 59 வயதிற்குட்பட்டவர்களுக்கு பயங்கர தாகமும், சிறுவர்கள், குழந்தைகள் தொடர்ந்து அழுவதாகவும் கூறுகின்றனர்.

இந்த நோய் எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டறிய, தற்போது காங்கோ அரசுடன் இணைந்து, உலக சுகாதார மையம் தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தாக்குதலை நிறுத்துகிறது ஈரான்! ஆனால்
தாக்குதலை நிறுத்துகிறது ஈரான்! ஆனால் "சரணடைய மாட்டோம்" அதிபர் பெசெஷ்கியன் அதிரடி
India US Oil: ”சொல்வதை செய்யும் இந்தியா” பிரதமர் மோடியை போட்டு கொடுத்த ட்ரம்ப் டீம்? - ரஷ்ய ஆயில்
India US Oil: ”சொல்வதை செய்யும் இந்தியா” பிரதமர் மோடியை போட்டு கொடுத்த ட்ரம்ப் டீம்? - ரஷ்ய ஆயில்
Top 10 News Headlines: தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, இந்தியாவிற்கு அமெரிக்கா அனுமதி, ஈரான் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, இந்தியாவிற்கு அமெரிக்கா அனுமதி, ஈரான் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
US India Russia Crude Oil: “உங்களுக்கு 30 நாள் டைம்“; இந்தியாவிற்கு உத்தரவிட்ட ட்ரம்ப் அரசு.! எதுக்காகன்னு தெரியுமா.?
“உங்களுக்கு 30 நாள் டைம்“; இந்தியாவிற்கு உத்தரவிட்ட ட்ரம்ப் அரசு.! எதுக்காகன்னு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
TVK Vijay: ‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
Embed widget