சுரைக்காய் சாப்பிடுவது இவ்வளவு நல்லதா?
வெள்ளரிக் குடும்பத்தை சேர்ந்த,நீர் காய்,சுரைக்காய்.
இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் கோடை காலங்களில் சாப்பிடுவது நல்லது. கலோரி குறைவு. ஹைட்ரேட்டாக இருக்க உதவும் காய் என்று சொல்லலாம்.
உடலின் வெப்ப நிலை, பித்தத்தை சமநிலைப்படுத்த உதவலாம் என்று சொல்கிறார்கள்.
சிறுநீரகம் ஆரோக்கியத்துடன் இருக்க உதவும்.
உடல் எடை குறைக்க நினைப்பவர்களும், சுரைக்காயுடன் பாசிப்பயிறு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிடலாம்
சுரைக்காயுடன் மல்லி, மிளகுத்தூள் மற்றும் உப்பு கலந்து, சாலட் செய்து சாப்பிடலாம். சுரைக்காய் சட்னி அரைத்து இட்லி, தோசைக்கு தொட்டுகொள்ளலாம்.
வாரம் இரண்டு முறை சுரைக்காய் சேர்த்து சாப்பிடலாம். வைட்டமின் நிறைந்தது.
சுரைக்காய் ஜூஸ் செய்தும் அருந்தலாம். இது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்கிறார்கள்.
நார்ச்சத்து நிறைந்த சுரைக்காய் ஊட்டச்சத்துள்ள காய்கறி.