Watch Video: சாலையில் விழுந்த இளைஞர் - நொடிப்பொழுதில் தப்பிய நிம்மதி.. பதைபதைக்கும் வீடியோ
நிலை தடுமாறிய அந்த வாகன ஓட்டி நடு சாலையில் விழுந்துவிட்டார். இந்தக் காட்சிகள் பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது. அப்போது அவர் எழுந்து சாலையின் ஓரமாக வர முயல்கிறார்.
உலகம் முழுவதும் விபத்துகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் சில சமயம் நல்வாய்ப்பாக விபத்தை சந்தித்தாலும் விபத்தை சந்தித்தவர்கள் எந்தவித சேதமுமின்றி தப்பியது உண்டு. அவர்கள் அவ்வாறு அந்த விபத்திலிருந்து தப்பிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாவது வாடிக்கை.
அந்தவகையில் தற்போது மலேசியாவில் நிகழ்ந்த விபத்து தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், இரு சக்கர வாகனத்தை மழையில் ஒருவர் மிதமான வேகத்தில் ஓட்டிவருகிறார். மழையும் நன்றாக பெய்துகொண்டிருக்கிறது.
அப்போது நிலை தடுமாறிய அந்த வாகன ஓட்டி நடு சாலையில் விழுந்துவிட்டார். இந்தக் காட்சிகள் பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது. அப்போது அவர் எழுந்து சாலையின் ஓரமாக வர முயல்கிறார்.
அந்தச் சமயத்தில் யாரும் எதிர்பாராவிதமாக லாரி ஒன்று கீழே விழுந்த வாகன ஓட்டியை நோக்கி வந்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட அந்த வாகன ஓட்டி லாரி தன் மீது மோதுவதற்குள் சாலையின் ஓரத்திற்கு வந்துவிட்டார்.
இந்த வீடியோவை சாலையின் ஓரமாக காரில் அமர்ந்திருக்கும் நபர் ஒருவர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவானது தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மேலும், வாகன ஓட்டிக்கு நேரம் நன்றாக இருந்ததாலும், அவரது சமயோஜித புத்தி சரியாக வேலை செய்ததாலும் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மரணத்தின் வாசலை தொட்டுவிட்டு மீண்டும் வந்திருக்கும் அந்த நபருக்கு பலரும் தங்களது வாழ்த்தையும், அறிவுரையையும் கூறிவருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Rajkiran about Ajith: “அஜித்தின் அந்த நல்ல மனசு... அதான் இவ்ளோ உயரத்துல இருக்கார்” - நெகிழ்ந்த ராஜ்கிரண்..!
Chennai: அட்டைக்கு நடுவே செல்போன்! சென்னை கிண்டியில் உள்ள பிரபல ஹோட்டல் கழிவறையில் கேமரா.!