மேலும் அறிய

Iran War US Vs UK: ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! போருக்கு விமான தளங்களை தர மறுத்த பிரிட்டன்; கடுப்பில் ட்ரம்ப்

அமெரிக்கா ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், ஈரானை தாக்குவதற்கு அமெரிக்கா கோரிய ராணுவ தளங்களை தர பிரிட்டன் மறுத்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

அமெரிக்கா ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக 2-ம் கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்ற நிலையில், எந்த நேரமும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதற்கு ஏற்றாற்போல், மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது படைகளை குவித்துள்ளது. இதில் தற்போது ஒரு திருப்பமாக, அமெரிக்காவிற்கு ராணுவ தளங்களை தர பிரிட்டன் மறுத்துள்ளது. அது குறித்து இப்போது விரிவாக பார்க்கலாம்.

ஈரானை மிரட்டிவரும் ட்ரம்ப்

அணு ஆயுத பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று தொடங்குவதற்கு முன்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானை எச்சரித்தார். இதைத் தொடர்ந்து, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியும் அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுப்பதாக எச்சரித்தார்.

இதனிடையே, எச்சரிக்கையோடு நிறுத்தாமல், ட்ரம்ப் தனது படைகளை மத்திய கிழக்கில் குவித்துள்ளார். போர்க்கப்பல் உள்ளிட்ட கூடுதல் ராணுவத் தளவாடங்களை மத்திய கிழக்கிற்கு அனுப்ப ட்ரம்ப் உத்தரவிட்ட நிலையில், மத்திய கிழக்கில் தற்போது அமெரிக்காவின் 13 பேர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதில், ஒரு விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரஹாம் லிங்கன், 9 டெஸ்ட்ராயர் கப்பல்கள் மற்றும் 3 லிட்டோரல் போர்க்கப்பல்கள் அடங்கும். அதோடு, உலகின் மிகப்பெரிய விமானம் தாஙகி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்ட், கரீபியனில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

பிரிட்டன் ராணுவ தளத்தை கோரிய அமெரிக்கா - மறுத்த பிரிட்டன்

இதைத் தொடர்ந்து, விரைவில் ஈரான் மீதான தாக்குதலும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை உறுதி செய்யும் வகையில், ஈரானை தாக்குவதற்கு ஏதுவாக, பிரிட்டனின் ராணுவ தளத்தை பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளது அமெரிக்கா.

ஆனால், பிரிட்டன் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பெருங்கடலில் டியாகோ கார்சியாவில் ராணுவ தளத்தை வைத்துள்ளது பிரிட்டன். இந்த ராணுவ தளம், கிழக்கு ஆப்பிரிக்க கடற்கரையில் இருந்து 3,200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்வதை எளிதாக்கும்.

அதனால், அந்த ராணுவ தளத்தை பிரிட்டனிடம் கேட்டுள்ளது அமெரிக்கா. ஆனால், சர்வதேச சட்டம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதியை கருத்தில் கொண்டு, அந்த தளத்தை வழங்க முடியாது என்று பிரிட்டன் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஈரான் மீது முக்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதலை நடத்துவது, சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்று கூறி, ஸ்விண்டன் அருகே உள்ள விமானப்படை தளத்தை கெடுக்கவும் பிரிட்டன் மறுத்துள்ளது.

இது குறித்து பிரிட்டன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்காக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா - பிரிட்டன் இடையே நிலவும் மோதல்

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இடையே ஏற்கனவே மோதல் போக்கு நிலவி வருகிறது. மொரீஷியஸிடம் சாகோஸ் தீவுகளை மீண்டும் ஒப்படைப்பதற்கு ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், அந்த விவகாரத்தில் ஏற்கனவே அவர்களுக்குள் மோதல் போக்கு நிலவுகிறது.

எனினும், கடந்த 17-ம் தேதி, பிரிட்டன் பிரதமர் கெர் ஸ்டார்மருடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, ஈரானை தாக்க பிரிட்டனின் ராணுவ தளத்தை பயன்படுத்த ட்ரம்ப் அனுமதி கோரினாரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில் தான், அமெரிக்காவிற்கு ராணுவ தளத்தை வழங்க பிரிட்டன் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது.

இது ஈரானுக்கு ஒரு வகையில் சாதகமான சூழலாக இருந்தாலும், ட்ரம்ப்பின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Donald Trump: ஈரான் - அமெரிக்கா போர் பதற்றம்.. 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி'.. கார்க் தீவை முடித்துவிட்ட டிரம்ப்.. அடுத்து எண்ணெய் தான்!
Donald Trump: ஈரான் - அமெரிக்கா போர் பதற்றம்.. 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி'.. கார்க் தீவை முடித்துவிட்ட டிரம்ப்.. அடுத்து எண்ணெய் தான்!
Crude Oil Products: பெட்ரோல் முதல் தார் வரை.. கச்சா எண்ணெயில் இருந்து இவ்ளோ எடுக்குறாங்களா?
Crude Oil Products: பெட்ரோல் முதல் தார் வரை.. கச்சா எண்ணெயில் இருந்து இவ்ளோ எடுக்குறாங்களா?
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN ELECTION DATE : தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
TNEB Salary Hike : அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Tomato And Onion Price : போட்டி போட்டு குறையும் தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ வெறும் இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
போட்டி போட்டு குறையும் தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ வெறும் இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Embed widget