'ஆர்டர் வந்த சிக்கனை சாப்பிட்டுவிட்டு எலும்பை டெலிவரி செய்த நபர்’ - இன்ஸ்டா வைரல்!
”பசியிலும் ஏதோ ஒரு விரக்தியிலும் சாப்பிட்டுவிட்டார், அவரை மன்னித்து விடுங்கள்” எனவும் நெட்டிசன்கள் கோரி வருகின்றனர்.
காய்கறி, துணிமணி, வீட்டு உபயோகப் பொருள்கள் தொடங்கி சுடச்சுட உணவு வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படுவது வரை டிஜிட்டல்மயமாக்கல், இணைய வணிகம் உள்ளிட்டவற்றால் இன்றைய நவீன உலகில் அனைத்தும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் இவற்றுக்கு சமமாக சில பாதகங்களும் இந்த சேவைகளில் இருக்கவே செய்கின்றன.
அந்த வகையில் முன்னதாக சிக்கன் உணவு ஆர்டர் செய்தவருக்கு நேர்ந்த சம்பவம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
அமெரிக்கரான டேமியன் சாண்டர்ஸ் எனும் நபர் சிக்கன் விங்ஸ், ஃப்ரென்ச் ஃப்ரை ஆகியவை அடங்கிய உணவையும் குளிர்பானம் ஒன்றையும் முன்னதாக ஆர்டர் செய்துள்ளார்.
தொடர்ந்து உணவு அவருக்கு டெலிவரி செய்யப்பட்டதை அடுத்து பசியுடனும் ஆர்வத்துடனும் உணவுப் பொட்டலத்தை பிரித்துப் பார்த்த அவருக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்துள்ளது. உணவுப் பொட்டலத்தில் ஃப்ரைஸ் பாக்கெட் காலியாக இருந்துள்ளது. ஆனால் அதைவிட பேரதிர்ச்சி, சிக்கன் விங்ஸ் பேக்கில் வெறும் எலும்புகள் மட்டுமே எஞ்சி இருந்துள்ளது. அதனுடன் குறிப்பு ஒன்றும் இருந்தது.
அதில், "மன்னிக்கவும், நான் உணவை சாப்பிட்டு விட்டேன். நான் மிகவும் உடைந்து போயிருந்தேன், பசியுடன் இருந்தேன். நான் இந்த மோசமான வேலையை இத்துடன் விடுகிறேன். நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்” என எழுதப்பட்டு இருந்துள்ளது.
View this post on Instagram
இந்தக் குறிப்பையும் உணவையும் பாதிக்கப்பட்ட அமெரிக்கர் சோகத்துடன் வீடியோ எடுத்துப் பதிவிட்டுள்ள நிலையில், இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள வீடியோ முன்னதாக ட்ரெண்ட ஆகியுள்ளது,
மேலும் இந்த வீடியோ குறித்து இன்ஸ்டா பயனர்கள் ஒருபுறம் கேலிக் கருத்துகள் பதிவிட்டு வந்தாலும், மற்றொருபுறம் ”பசியிலும் ஏதோ ஒரு விரக்தியிலும் சாப்பிட்டுவிட்டார், அவரை மன்னித்து விடுங்கள்” எனவும் நெட்டிசன்கள் கோரி வருகின்றனர்.
மேலும் படிக்க: Pakistan Flood : வரலாறு காணாத மழை...வெள்ளத்தால் சூழ்ந்த பாகிஸ்தான்...33 மில்லியின் மக்கள் பாதிப்பு...அதிர்ச்சி தகவல்
இலங்கையில் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட 80 பேருக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு.. விசாரணை தொடக்கம்.