இலங்கையில் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட 80 பேருக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு.. விசாரணை தொடக்கம்.
இலங்கையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் 80 பேர் உள்ளிட்ட 386 பேருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு
இலங்கையில் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு நிலைகளில் உள்ள 80 அரசியல்வாதிகள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் 386 பேருக்கு எதிராக லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுக்கு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்திருக்கிறது.
இந்த லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் பெயரிடப்பட்டுள்ள என்பது பெயரில் ஒருவர் முன்னாள் அமைச்சர் எனவும் மீதமுள்ள 42 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என சொல்லப்படுகிறது. இதேவேளை முறைகேடாக சொத்துக்களை சம்பாதித்த குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஒருவர் உட்பட 42 பேருக்கு எதிரான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஜனவரி முதலாம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரையான காலப்பகுதியில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் இந்த காலப்பகுதியில் லஞ்சம் பெற்றது தொடர்பாக 22 சுற்றிவளைப்பு சோதனைகள் நடத்தப்பட்டு இருப்பதாக இலங்கையில் லஞ்ச ஒழிப்பு ஆணை குழு தெரிவித்திருக்கிறது .
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியினை பயன்படுத்தி பல்வேறு வழிகளில் லஞ்சம் பெற்றிருப்பது தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஊழல் மோசடிகள், லஞ்சம் பெற்ற மற்றும் முறைகேடாக சொத்து சம்பாதித்தது தொடர்பாக இலங்கை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இந்த வருடத்தில் பல வழக்குகளை தாக்கல் செய்திருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் லஞ்சம் பெறும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினர் கூறியுள்ளனர். இலங்கையில் லஞ்ச ஊழல் விசாரணை என்பது தற்போது இலங்கையர்களுக்கு புதிதாக தான் இருக்கலாம். ஏனென்றால் இவ்வாறான விசாரணைகள் என்பதோ இலங்கையில் நடைபெறுவது மிக மிகக் குறைவு. ஏனைய இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் அரசியல்வாதிகளின் வீடுகள், நிறுவனங்களில் புகுந்து விசாரணைகள் நடத்தப்படுவது போல் இலங்கையில் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.
இந்நிலையில் தற்போது புதிதாக இலங்கையில் காலங்கள் கடந்துள்ள நிலையில் லஞ்ச ஒழிப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பாலானவர்கள் தமது பணத்தொகையை வெளிநாடுகளில் தான் பதுக்கி வைத்திருக்கிறார்கள். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பல்வேறு துறைகளில் ஊழல், லஞ்சம் போன்றவை நடைபெற்று இருப்பதாகவே அறிய முடிகிறது. இந்நிலையில் பல தசாப்தங்கள் கடந்த பின்பு இலங்கையில் லஞ்ச ஒழிப்பு விசாரணை அந்நாட்டு ஆணை குழுவினரால் தொடங்கப்பட்டிருக்கிறது.
இது நியாயமான முறையில் நடைபெறுமா என்பது இன்னும் ஒரு கேள்விக்குறி .
ஏற்கனவே இலங்கையில் நடைபெற்ற போரின்போது மிக விமான கொள்வனவு தொடர்பான ஊழல் குறித்த விசாரணை இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இலங்கையில் பல தசாப்தங்களாக நடைபெற்ற லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகளை விட்டுவிட்டு தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் ,கடந்த ஆறு மாதத்திற்குள் நடைபெற்ற லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் தான் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஆகவே மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடியது நாட்டை பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கிய அரசியல்வாதிகளை ஆட்சியில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி.
இலங்கையில் உள்ள பல அரசியல் தலைவர்கள் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து தான் மக்கள் வீதிகளில் இறங்கி அவர்களுக்கு எதிராக போர் கொடி தூக்கினார்கள். ஆகவே உண்மையான குற்றவாளிகள் மீது தான் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா அல்லது வெறும் கண்துடைப்பு நாடகமா எனவும் தெரியவில்லை. இந்நிலையில் இலங்கையில், ஒரு மொழி பேசும் பெரும்பான்மை சிங்களவர்கள் ,ஆட்சியிலும், அதிகார மட்டத்திலான பொறுப்புகளிலும், ஏனைய நாட்டின் உள்துறைகளிலும் இருக்கும் வரை எந்த வழக்குக்கும் எந்த குற்றச்சாட்டுகளுக்கும் நியாயமான தீர்வு கிடைக்காது என்பதுதான் உண்மை.