சுவிஸ் வங்கியில் அதிகரிக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் ? ; விளக்கமளித்த நிதி அமைச்சகம்
கடந்த 13 ஆண்டுகளில் இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் குவித்துள்ள பணத்தின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் பலர் சுவிஸ் வங்கியில் தங்களுடைய கருப்பு பணத்தை கோடிக்கணக்கில் பதுக்கி வைத்துள்ளனர் என்று பல ஆண்டுகளாக கூறப்படுவதை நாம் கேட்டிருக்கிறோம். இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் குவித்துள்ள பணம் 6,625 கோடி என்று கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு இறுதியில் இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் குவித்துள்ள பணத்தின் மதிப்பு சுமார் 20 ஆயிரத்து 700 கோடிக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக சில தகவல்கள் வெளியானது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த தொகை மிகவும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் வெளியான இந்த தகவலை மறுக்கும் விதமாக மத்திய நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் :
வங்கிகளால் சுவிஸ் தேசிய வங்கிக்கு அளிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலை அந்த வங்கி ஊடகங்களிடம் தற்போது வெளியிட்டுள்ளது. ஆனால் சுவிஸ் நாட்டில் இந்தியர்கள் வைத்திருக்கும் கருப்புப் பணத்தின் அளவு குறித்து எந்த தகவலும் அந்த வங்கியால் வெளியிடப்படவில்லை என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது. அதேசமயம் வெளியிடப்பட்ட இந்த புள்ளிவிவரங்களில், இந்தியர்கள், வெளிநாட்டுவாழ் இந்தியர்கள், அல்லது பிறர் வைத்திருக்கும் பணம் ஆகியவை 3ம் நாட்டு நிறுவனங்களில் பெயர்களில் இல்லை என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் 13 ஆண்டுகளில் இந்த மிகப்பெரிய அதிகரிப்பு எப்படி? என்ற கேள்வி எழும் நிலையில், இவையெல்லாம் பத்திரங்கள், பிணையங்கள் மற்றும் பிற நிதி ஆவணங்களின் வடிவங்களில் வந்தவை என்று கூறப்படுகிறது.
மேலும் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு அதிகரிக்க, இந்தியாவில் சுவிஸ் வங்கி கிளைகளில் இந்தியர்களின் வைப்புத் தொகை உயர்வு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்திய நிறுவனங்களின் வர்த்தக பரிமாற்றங்கள் அதிகரிப்பு, சுவிஸ் வங்கி மற்றும் இந்திய வங்கிகளுக்கு இடையேயான உள் வங்கி பரிமாற்றங்களில் முன்னேற்றங்கள் போன்றவையும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேகதாது அணை விவகாரம்: உச்சநீதிமன்ற வழக்கை விரைவுபடுத்த தமிழ்நாடு அரசுக்கு வைகோ கோரிக்கை..!
மேலும் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் 2020-ஆம் ஆண்டின் இறுதியில், தனிநபர்களும் நிறுவனங்களும் வைத்துள்ள நிதிகளின் மாற்றங்களுக்கு சாத்தியமான காரணங்களையும் அது தொடர்புடைய உண்மைகளையும் வங்கி அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாக கூறியுள்ளது.