மேலும் அறிய

Princess Diana : மக்களின் இளவரசி டயானா நினைவுதினம்! - 25 ஆண்டுகளாக அவிழாத மர்ம முடிச்சுகள் !

உடற்கூறாய்வில் டயானா 6 மாதம் கர்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் அதனை அறிந்த இராஜ குடும்பம் இவ்வாறு திட்டமிட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது.

டயானா :

மக்களின் இளவரசி என கொண்டாடப்பட்ட இளவரசி டயானாவை பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.  டயானா பிரான்ஸஸ் ஸ்பென்சர் என்னும் இயற்பெயர் கொண்டவர். டயானா பிரான்ஸஸ் ஸ்பென்சர் 1961ஆம் ஆண்டு, ஜூலை மாதம் முதல் நாள் , நார்போக் என்னும் இடத்தில் பிறந்தார். டயானாவின் ஸ்பென்சர்ஸ் குடும்பம் பல தலைமுறைகளாக அரச குடும்பத்துடன் நெருக்கமான நட்பு வைத்திருந்தனர். டயானா பள்ளி படிப்பை முடித்த பின்பு சுவிட்சர்லாந்தில் உள்ள இன்ஸ்டியூட் ஆல்பின் விடிமானட்டே என்னும் கல்லூரியில்  பட்டப்படிப்பை முடித்தார் . அதன் பின்பு  லண்டனுக்கு திரும்பியவர் நைட்ஸ்ப்ரிட்ஜில் உள்ள  கிண்டர்கார்டன் ஒன்றில்  உதவியாளராக பணிபுரிந்தார். அந்த சமயத்தில்தான் இங்கிலாந்து நாட்டின் அப்போதைய இளவரசர் சார்லஸின் அறிமுகம் டயானாவிற்கு கிடைத்தது. 

Princess Diana :  மக்களின் இளவரசி டயானா  நினைவுதினம்!  - 25 ஆண்டுகளாக அவிழாத மர்ம முடிச்சுகள் !

காதல் :

1977ல்  டயானாவுக்கு சார்லஸுக்குமான காதல் பொது சமூக அறிய ஆரமித்தது. டயனாவை விட சார்லஸ் 13 வயது மூத்தவர். ஆனாலும் டயானாவின் குடும்ப அரச குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் என்பதால் சிறு வயது முதலே இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரீட்சியமானவர்கள்தான். இவர்களின் காதலை அங்கீகரித்த அரச குடும்பம் 1981ம் ஆண்டு பிப்ரவரி  6ம் தேதி பிரின்ஸ் சார்லஸ் மற்றும் டயானா ஆகியோருக்கு பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். 12 கேரட் ஓவல் சைலோன் சபயர் சுற்றிலும் 14 சாலிட்டர் வைரம் பதிக்கப்பட்ட ஆடம்பர மோதிரம் ஒன்றை டயானாவிற்கு பரிசளித்திருந்தார் இளவரசர் சார்லஸ். 

Princess Diana :  மக்களின் இளவரசி டயானா  நினைவுதினம்!  - 25 ஆண்டுகளாக அவிழாத மர்ம முடிச்சுகள் !

மக்களின் இளவரசி :

டயானாவை மக்கள் கொண்டாடினார்கள் , அவரது திருமணத்தை அவ்வளவு எதிர்பார்த்து காத்திருந்தார்கள் 
 காரணம் டயானா மக்களிடம் அதீத அன்பு பாராட்டுபவராக இருந்தார் . உதாரணமாக சொல்ல வேண்டுமானால் அந்த சமயத்தில் அரச குடும்பமே  எய்ட்ஸால் பாதிக்கப்படவர்களை ஒரு தொற்று நோயாளி போல தீண்ட தகாதவர்கள் போல நடத்தினார்கள்  ஆனால் டயானா அவர்களிடம் கை குலுக்கியபடி , கட்டி அணைத்தபடி அன்பு காட்டி அது தொற்று நோய் அல்ல என்பதை மக்களுக்கு உணர்த்தினார். அதே போலத்தான் தொழு நோயாளிகளிடமும் டயானா நட்பு பாராட்டினார். மக்கள் எதிர்பார்த்த அந்த நாள் வந்தது. 1981 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸை பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டர். புனை கதைகளில் இளவரசி திருமணம் எப்படி இருக்குமோ அப்படியாக அந்த திருமணம் நடந்தது . ஆனால் அந்த திருமணம் நீடிக்கவில்லை . 1996 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர் .

Princess Diana :  மக்களின் இளவரசி டயானா  நினைவுதினம்!  - 25 ஆண்டுகளாக அவிழாத மர்ம முடிச்சுகள் !
25 ஆண்டுகளாக  நீடிக்கும் மர்மம் :

விவாகரர்த்திற்கு பிறகு தனியாக வாழ்ந்து வந்த இளவரசி டயானாவிற்கும் தொழிலதிபரான முகமது அல் ஃபயீத்தின் மகன் டோடி அல் ஃபயத்துக்கும் தொடர்பு இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் டயானா புதிய நண்பருடன் விருந்துக்கு செல்வதாக தகவல்கள் வெளியானது. அதனை புகைப்படம் எடுக்க பத்திரிக்கையாளார்கள்  துரத்திய  நிலையில் காரை டயானா வேகமாக ஓட்ட , தனது கார் ஓட்டுநருக்கு அறிவுறுத்தியதாகவும் அந்த சமயத்தில் கார் நிலை தடுமாறி சுரங்கபாதை வழியே செல்லும் பொழுது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றிஆகஸ்ட் 31 ஆம் தேதி உயிரிழந்தார்.

அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் :

இந்த விபத்து கொலை என அவரது நலன் விரும்பிகளால் கூறப்படுகிறது. ஏனென்றால் உடற்கூறாய்வில் டயானா 6 மாதம் கர்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் அதனை அறிந்த இராஜ குடும்பம் இவ்வாறு திட்டமிட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது.இங்கிலாந்தின் உளவுத் துறையின் ரகசிய ஏற்பாட்டின் படி, அரச குடும்பம் தான் டயானாவை கொன்று விட்டது என்று முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. விபத்தில் இறந்த டயனாவின் உடலில் காயம் ஏற்படாதது ஏன் ? ஏன் தலையில் பலத்த காயம் என கூறினார்கள் ?  விபத்து ஏற்பட்ட 10 நிமிடங்களில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தது எப்படி?  5 நிமிடங்கள் ஆம்புலன்ஸ் வந்தது எப்படி ? என டயானாவின் மரணத்தில் ஏகப்பட்ட மர்ம முடிச்சுகள் இன்றும் அவிழ்க்கப்படாமல் இருக்கின்றன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா...கங்கையில் நீராடி பிரார்த்தனை
மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா...கங்கையில் நீராடி பிரார்த்தனை
WPL 2025 RCB VS DC : இறுதி போட்டியில் தோல்வி.. பழிதீர்க்குமா டெல்லி கேபிடல்ஸ்! பெங்களூருவுடன் மோதல்..
WPL 2025 RCB VS DC : இறுதி போட்டியில் தோல்வி.. பழிதீர்க்குமா டெல்லி கேபிடல்ஸ்! பெங்களூருவுடன் மோதல்..
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.